உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - இரண்டு குழந்தைகள்

மிஷ்கா தடுமாறினன். அதனல் மெளனமானன். காட்கா ஆழ்ந்த கேள்விக்குறியுடன் அவனைப் பார்த்தாள். அப்படி யென்றால் ஏகப்பட்ட பணம் செலவாகுமே” என்று அவள் மெலிந்த குரலில் பேசத் துணிந்தாள்.

'வாயை மூடு. சும்மா இரு. அது அவ்வளவு பிரமாத மில்லை. உண்மையில் அது மிகவும் கொஞ்சம்தான்். இன்னும் எட்டு கோப்பெக்கு பெறுமானம் தின்பண்டம் தின்போம்.ஆக மொத்தம் முப்பத்து மூன்று. நாம் ஏதாவது செய்வதான்ல்,அதைச் சரியாகச் செய்வோம்.இன்று கிறிஸ் துமஸ் இல்லையா? ஆகவே, நம்மிடம் மிச்சம் இருக்கக் கூடியது ... கால் ரூபிள் என்றால் ... எட்டு பத்துக் கோப் பெக்குகள் போச்சு ... முப்பத்து மூன்று ஆனால் ... ஏழு பத்துக் கோப்பெக்குகளும் இன்னும் ஏதோ கொஞ்சமும் ஆகும். எவ்வளவு என்று பார்த்தாயா? அந்த நாசமாய்ப் போகிற கிழட்டுச் சூனியக்காரி இதை விட அதிகமாக என்னத்தை எதிர்பார்க்க முடியும்? ஓடி வா. சீக்கிரமாக வா!'

கையோடு கை கோத்துக்கொண்டு அவர்கள் கடை மேடை மீது தத்தியும் தாவியும் முன் சென்றார்கள். பனி அவர்கள் கண்களுக்குள் வீசி அவர்களைக் குருடாக்கியது. அவ்வப்பொழுது பனிப்படலம் ஒன்று அவர்கள் மேலே கவிந்து, மெல்லிய போர்வையினல் அவர்களின் சிறு உரு வங்களே மூடி மறைத்தது. உணவும் உஷ்ணமும் பெறும் ஆர்வத்தால் அவர்கள் அம்மூடாக்கை வேகமாகக் கிழித்து விட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அப்படி ஓடியதால் மூச்சு வாங்க, காட்கா சிரமத் துடன் பேசிள்ை: "கவனித்துக்கொள். நீ என்ன நினைக் கிருய் என்று நான் கவலைப்படப் போவதில்லே .... ஆனல், அவள் கண்டுபிடித்து விட்டால் ... கான் சொல்லிப்போடு