உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள்

அநேகமாக ஒவ்வொரு சனிக்கிழமை சாயங்காலமும், மாலைப் பிரார்த்தனைக்கு முன்னதாக, அந்தக் கூச்சல் எழு வது வழக்கம். குப்பை கூளம் சிதறிக் கிடக்கிற-கும்பல் மிகுந்த சிறிய முற்றத்தில், காலத்தால் பழுதுற்று விளங் கிய மர வீடுகள் சூழ்ந்த இடத்தில், நெடுகிலும் பரவும் அது. வியாபாரி பெடுன்னிக்கோவுக்குச் சொந்தமான, அழுக்குப் பிடித்த பழைய வீடு ஒன்றின் கீழ்த்தளத்தில் உள்ள இரண்டு ஜன்னல்கள் வழியாக மேலெழுந்து ஒலிக்கும் அக் கூவல், பெண் ஒருத்தியின் மூர்க்கமான அலறலாகும். **iᎸaᎣl குடிகாரப் பிசாசே, நில்!” என்று அந்தப் பெண் தனது தொண்டை கிழியும்படியான குரலில் கத்துவாள். - -

என்ன வெளியே போக விடு' என்று ஒரு ஆணின் கடுமையான தொனியில் பதில் குரல் கிளம்பும். - "நான் விடமாட்டேன். மிருகமே!' - - -

நீ விடமாட்டாயா? விடமாட்டாயாக்கும்: அதைத் தான்் பார்ப்போமே!” -