உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

விராட்டு லிங்கத்தின் இடப் பக்கம் அல்லது கீழ்த் திசையில் கெளரியின் சன்னிதியும் கெளரி குளமும் இருக்கின்றன. இக் குளத்தன் உயரம் சமுத்திர மட்டத்துக்குமேல் 18,400 அடி இது சதாகாலமும் உறைபனியால் மூடப்படிருக்கிறது. ராஜ ராஜேஸ்வரியின் அந்தப்புரத்தில் ஓர் அழகிய ர்ே சில கட்டுவிக் கப்பட்டது போன்றும், மற்றெவர் கண்ணுக்கும் தென்படாது பல கூடங்களினின்று அம்பிகையும் அம்பிகையின் தாதிமார்க ளும் வந்து தீர்த்தமாடிவிட்டுப் போதற்கான துறைகளும் வாயில்களும் தெய்வாதினமாக உட்புறத்தில் அமைந்திருட்டன போலவும் இக்குளம் காட்சியளிக்கிறது. இங்கிருந்து இரண்டு ஓடைகள் உற்பத்தியாகிக் கயிலேயின் இரு மருங்கிலும் ஒடிப் பிறகு ராக்ஷஸ் தடாகத்தில் சங்கமமாகின்றன.

அண்ட காயகனது அரண்மனை போன்றது கயிலே. இரு பத்தொன்பது மைல் சுற்றளவுடைய அதற்கு அகழி, பிரா காரம், கோட்டை, கொத்தளம், கோபுரம், கூடம், மாடம், கொலு மண்டபம், அந்தப்புரம் ஆகிய மனே மாட்சியனேத்தும் ஒருங்கே அமைந்திருக்கின்றன. அதன் தென்புறம் ஒரே சம வெளி பாக்கி மூன்று பக்கங்களிலும் அணியணியாக மலேகள் இருக்கின்றன. ஆனால், அவைகள் வெறு மலேபோன்று தென் படுவதில்லே. விஸ்வேசுவரன் வீற்றிருக்கும் கொலு மண்டபத் துக்கு அருகில் அவனுடைய கணங்கள் சிப்பந்திகள் முதலாயி னேர் வசிப்பதற்கான வாசஸ்தான்ங்களாக அவைகள் விளங்கு கின்றன. மந்திரி பிரதான்ியர் முதல் வெற்று ஏவலாளர் பரியந்தம் பல படித்தரங்களில் இருக்கும் லட்சக்கணக்கான பேர் களுக்கு என்னென்ன வித மாளிகைகள், உப்பரிகைகள், சாமா னியமான வீடுகள் தேவையோ, அவை யாவும் ஆங்கிருக்கின் றன. தேவலோகத் துக்கேற்ற ஓர் ஒப்பற்ற நகரம் போன்று அவைகள் காட்சியளிக்கின்றன.

கயிலையின் தென்புறத்தில் கண்ணுக்கெட்டுமளவும் ஒரே சமவெளி. அதில் நாற்பது மைலுக்கப்பால் மானச சரோவரம் இருக்கிறது. சரோவரம் என்பது தடாகம், அதன் பெயருக்கு ஏற்ப அது வாஸ்தவத்தில் பூலோகத்தில் உள்ள ஒரு தடாக மோ அல்லது மைேகற்பிதத்தால் அது ஒரு தடாகமாகத் தோன்று