உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

அருள், அன்பு, வீரம், தியாகம், கியாயம் முதலிய குணங்களைப் புகழ்ந்து அவ்வப்போது பல கவிகள் பாடி அவனே மகிழ்வித்து வந்தனர்.

ஒளவையார் அதியமானுடன் இங்கனம் அமர்ந்து வரும் காளில், காஞ்சிமா நகரத்தை ஆண்டுகொண் டிருந்தவனுகிய தொண்டைமான் என்னும் அரசன், தனக்குள்ள படை வலி காரணமாக அதியமானத் தன்னினும் மெலியவனெனக் கருதி, அவளுேடு போர் செய்யச் சமயம் கோக்கியிருந்தான்். இதனே உணர்ந்த அதியமான், தன் ஆற்றலையும், சிறப்பினேயும், அஞ்சா மையையும் தாது மூலம் தொண்டைமானுக்கு அறிவித்தற்குக் கருதியவன், இவ்வரும்பெருஞ்செயலுக்குத் தக்கவர், காவன் மையும், பாவன்மையும், அரசியலறிவும் மிக்க ஒளவையாரே, எனத் துணிந்து, அவரை அவனிடத்துத் தூது செல்லவேண்டி ன்ை. ஒளவையாரும் அவ்வரசியற்பெருங்காரியத்தைப் பின் னிடைவின்றி ஏற்றுக்கொண்டு, புறப்பட்டுப்போய்க் காஞ்சிமா நகரடைந்து, தொண்டைமானேக் கண்டார். அவனும் புலவரா யும் தூதராயும் வந்த ஒளவையாரை முகமன் உரைத்து உப சரித்தான்். ஒளவையார் அவனது அரண்மனைக்கண் அன்று உண்டியருக்தி இளேப்பாறித் தங்கியிருந்தனர்.

பின்னர்த் தொண்டைமான் தனது அரண்மனைக் காட்சி யைப் பகையரசகிைய அதியமானிடத்திருந்து வந்த ஒளவையா ருக்குக் காண்பிப்பான் போலத் தன் படை மிகுதியையும்பேராற் றலேயும் உணர்த்த கினேந்து, இவரை அழைத்துச் சென்று பல இடங்களேயும் காட்டி வந்தவன், தனது ஆயுதச்சாலைக்கு அழைத்து வந்து, அங்கு கெய் பூசி உறையிட்டு அலங்கரித்து அணி அணியாய் வைத்திருக்கும் ஆயுதங்களே யெல்லாம் காட்டி கின்ருன் ஒருவர் மனத்தது அறிந்து பாடும் ஆற்றல் வாய்ந்த ஒளவைப் பிராட்டியாருக்கு அவனது உட்கிடையை அறிதல் அரியதாமோ ? இவர் படைக்கலங்களைப் பார்த்து, அவனுக்குச் செருக்கடங்க அறிவு கொளுத்த கினைந்து சில கூறுபவராய், "இப்படைக் கருவிகளெல்லாம் போரில் பயன்படாமையால் மயிற்பீலி அணியப்பட்டு, மாலே குட்டப்பட்டு, திரண்ட காம்பு திருத்தி, நெய் பூசி, காவலேயுடைய அரண் மனேக்கண் வீணே