உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 செக்த்மிழ் இலக்கியத் திரட்டு-11

னர். அவ்வமயம் ஒளி, மலேயமானுக்குப் பகைவளுகிய அதிய மான் நெடுமானஞ்சியைத் தனக்குத் துணையாக உதவும்படி வேண்டினன். அதியமான் தன்மீது படையெடுக்கக் கருதியிருக் கும் பெருஞ்சேரலிரும்பொறையையும், மலேயமானேயும் வலி தொன்ப்பதற்கு இதுவே கல்ல தருணமென தினத்து, தன் கட்பரசராகிய சோழனையும் பாண்டியனையும் தன் ைேடு சேர்த் துக்கொண்டு, ஒரியின் கொல்லிக்கூற்றத்துக்கு வந்து, ஒரியு டன் சேர்ந்து, சேரமாளுேடும் மலேயமாைேடும் பெரும்போர் புரிந்தான்். அப்போரில் பெருஞ்சேரல், அதியமானையும் சோழ பாண்டியரையும் வென்ருேட்டி, அவர்தம் முரசுங்குடையுங் கவர்ந்து, ஒரியைக் கொன்று, கொல்லி மலேயைக் கைப்பற்றிக் கொண்டான். அதியமான் தனது தகடூர்ப் போரில் மதிலினுள் மறைந்திருந்தான்் : மலேயமானும், பெருஞ்சேரலும் தகடூர்மேற். படையை நடாத்தி மதிலே வளேத்தனர். அதியமான் மதிலுள் விருந்து வெளி வந்து எதிர்த்துப் போர் செய்யாதிருந்தனன்.” பகைவர் மதிலின வளைத்தலையும் அதியமான் வாளா இருத்த லேயுங் கண்ட ஒளவையார், அதியமானுக்கு அவனது ஆற்றலை எடுத்துக்காட்டிப் போரில் மனஞ்செல்ல ஊக்கமூட்டுவதற்குக் கருதி, அவனே அணுகி, 'மலேச்சாரலிலுள்ள புலியானது சிறு மிடத்து, அதற்கு எதிர் சிற்க வல்ல மான் கூட்டமும் உளவோ? குரிய மண்டலம் கொதித்து எழுமாயின், ஆகாயத்தினும், திசையின்கண்ணும் இருளுமுளதோ ? அவை போல நீ போர்க் களம் புகுந்தால், இவ்வுலகத்தில் உனது காட்டைக் கவர்ந்து ஆரவாரிக்கும் வீரரும் உளர்ோ ?" என்று கூறினர்.

இது கேட்ட அஞ்சி, வீரங்கொண்டு போர் விருப்புற்று அஞ்சாது பகைவரை ஒட்டுதற்கு மதிற்புறத்துப் போர்க்களம் புகுந்து, பகைவர் வேல் வரினும் விழித்த கண் இமையாது வீர திரமோடு போர் உடற்றினன். அப்போது பகைவர் விடுத்த படைகள் பல அதியமானது மார்பினும், கழுததினும், முகத்தி லும் பட்டுப் புண்படுத்தின; அவ்வமயத்தும் ஒளவையார்

1. ஒருவன் மேற் சென்று.ழி ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின், அஃது உழிஞையில் அடங்கும்; அது சேரமான் செல்வுழித் தகடுfடை அதியமான் இருந் ததாம்’ (தொல்பொரு. 62 கு. உரை. நச்.)