உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரும் அதியமானும் §§

போர் செய்து இறுதியில் அதியமான் அஞ்சிக்கு அஞ்சிப் புறங் கொடுத்தோடி னன். அவனுடைய படைகளும் கிலே கலங்கிக் கலந்தன. கோவலூர், அதியமானது ஆட்சிக்குட்பட்டது. அவனது போர் வெற்றியைக் கண்ட பரணர் என்னும் புல வர் பெருந்தகையும் ஒளவையாரும் வியந்து அவனேப் புகழ்ந்தனர்.

இங்ங்னம் அவ்வதியமான், கோவலூரை வென்று கைக் கொண்டபின்னர் ஒளவையாருடன் மீண்டு தகடூர் புகுமளவில் அவ்வமயத்து நீண்ட நாளாக மகப்பேறில்லாமலிருந்த தனக் குத் தவமகன் பிறந்திருக்கிருனென்று தெரிந்து, புதல்வன் பிறந்தவுடன் புதல்வன் முகத்தைத் தங்தை பார்த்து மகிழ வேண்டுமென்பது அறநூல் விதியாகலின், தான்் பூண்ட போர்க் கோலத்தைக் களேயாம்லே விரைவிற்போய் மகன் முகத்தைக் கண்ணுற்ருன் உடனிருந்த ஒளவையார், அப்போது அத்தன்மையை, கையின்கண் உள்ளது வேலே : காலின்கண் உள்ளது வீரக்கழல்; உடம்பின்கண் உள்ளது வியர்வை கழுத் தின்கண்ணது பகைவர் படை பாய்ந்த ஈரம் புலராத பசிய புண் ; பகைவரை வெகுண்டு பார்த்த கண், தவ மகனேக் கண் டும் சிவப்பு நீங்கினதில் லே ; ஆதலால், இவன் சோபத்துக்கா ளான பகைவர் பிழைத்த லுமுண்டோ !” என வியந்து, அதிய மானது வீரத்தைப் புனேந்துரைத்தார்.

இவர்கள் செய்தி இங்ங்ணமாக, அதியமானஞ்சியால் வெல் லப்பட்டுத் தனது கோவலூரை இழந்த மலேயம்ான் இழந்த ஊரை எவ்வாற்ருலேனும் மீண்டும் பெறக் கருதி, அதற்குத் துணை தேடி, முன்பு பல முறையும் போரில் தன்னைத் துணை யாகப் பெற்றவனும் சிறந்த வீரனுமாகிய சேரமான் பெருஞ்சேரவிரும்பொறை என்னும் அரசன அடைந்து, தனக்கு உதவி புரியுமாறு வேண்டினன். அவன் தன் நண்பன கிய அவனுக்குத் துணை செய்ய ஒருப்பட்டுப் பெரும்படை யோடு புறப்பட்டவன், வல்வில் ஓரி என்னும் வள்ளலுக்குரிய வளமிக்க கொல்லி மலையை முதற்கண் பொருது கைப்பற்ற வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டான். மலேயமான் அதற் கிசைய, இருவரும் கூடிக் கொல்லி மலையை முற்றுகையிட்ட