உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழி காட்டி 8;

பப்படும். இந்தக் குறிப்பு கிலேயத்திற்குப் போய் விமானத்துக் குத் திரும்பி வரப்பிடித்த நேரத்தைக்கொண்டு விமான கிலே பத்திற்கும் விமானத்திற்கும் உள்ள தொலைவினேப் பர்லாங்கு அளவு வரையிலும் மின்சாரக் கருவிகளிலுள்ள முள் காட்டும். இந்த ரேடியோ ஒலிக் குறிப்புத் திரும்பி வரப் பிடிக்கும் கால இடைவெளி மிகமிகச் சிறிது காதுகொண்டு கேட்டறிய முடி பாதது. விமானத்தின் கருவிகள் தாமாகவே இக்காரியத்தைச் சாதிப்பதால், மோட்டார் வண்டியிலுள்ள கருவியில் தூரத்தை அறிவது போல அறிவது எளிதாயிருக்கிறது.

இதெல்லாம் ரேடியோக் கருவிகளின் கூத்துதான்். ஒரு கருவி, ரேடியோக்கதிரிலிருந்து விமானம் ஒரு குறிப்பிட்ட துாரம் விலகிப் பிரயாணம் செய்ய வசதியளிக்கிறது. இன் ளுெரு கருவி, கிலேயத்தில் விமானம் இறங்கும் பாதைக்கு எதி ரில் அமைக்கப்பட்டிருக்கும். இதன் உதவியால் பாதிைக்கு நேராக இறங்க முடிகிறது. விமானியாலே, அல்லது கருவி யாலே எதாவது தவறு நேர்ந்தாலும் வேறொரு ராடார்க் கருவி ஒத்தாசை செய்கிறது. இவ்விரண்டும், விமானம் இன் னும் எத்தனை கெஜ தூரம் பறக்க வேண்டும் விமானத்தின் சக்கரங்கள் தரையைக் தொட இன்னும் எவ்வளவு கீழிறங்க வேண்டும் என்பவற்றைக் காட்ட வல்லன. கிலேயத்திலிருந்து அனுப்பப்படும் ராடார்க் கதிர், இறங்கி வரும் விமானத்தில் பிரதிபலிக்கப்பட்டு, மறுபடியும் கிலேயத்தையே அடையும் ; இது மின்சாரக் கருவியிலுள்ள ஒரு திரையில் அந்த விமானத் தின் உருவத்தை விழச் செய்யும். திரையின் நடுவே உருவ மிருந்தால் சரி. இல்லேயென்றால், விமானி விலகி வருவதா கத் தெரியும். கருவியை இயக்குபவன் ரேடியோ மூலம் விமானியை வலமாகவோ நேராகவே பறக்கும்படியாகச் சொல்லுவான்.

மேலும், அதிகமாக விமானப் போக்கு வரவு இருக்கும் இடங்களில் விமானங்களே ஒழுங்காகச் செலுத்தவும் ராடார்க் கருவிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 30 மைல் வட்டாரத் திற்குள் வரும் விவானங்களைப் பற்றி, பகல், இரவு, மழை, மூடு பனியுள்ள சமயங்களிலுங்கூட அறிவிக்கிறது. உயரமான இடங்களிலிருந்து இதைக் கவனித்து விமானங்களை ஒவ்வொன்