உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையும் புண்ணியதாசனும் 岛莎

யார் என்று கேட்டாள். அதற்கு மணிமேகலே தன்னுடைய சென்ற பிறப்பின் செய்திகளையும் இப்பிறப்பின் வரலாற்றை யும் கூறி, "உன் வரலாறு யாது?’ எனக் கேட்க, அவள், "இத் தீவிற்கு அயலிலுள்ள இரத்தினதிவத்திலே மிக உயர்ந்து விளங்கும் சமந்தகூடமலேயின் உச்சியிலே உள்ள புத் துதேவ ரின் அடியிணைப்படிமங்களைத் தரிசித்துவிட்டு இத்தீவிற்கு முன் ஒரு காலத்தில் வந்தேன் ; அது முதல் இந்திரன் கட்டளே யால் இத்தரும பீடிகையைக் காத்துக்கொண்டிருக்கிறேன் : என் பெயர் தீவதிலகை என்பது," என்று தன் வரலாறு கூறிப் புத்தபீடிகையின் மகத்துவத்தையும் அதனைத் தரிசித்து மணி மேகலை பழம்பிறப்புணர்ந்ததையும் புகழ்ந்து கூறிள்ை. கூறிய வள், ஆபுத்திரன் கோமுகிப் பொய்கையில் முன் ஒரு நாள் விட்ட அக்ஷயபாத்திரத்தை மணிமேகலையின் கையிற்படுத்த எண்ணி, இட் பீடிகைக்கு முன்னே மாமலர்க்குவளேயும் கெய் தற்பூக்களும் கலந்து, கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி ஒன்றுளது ; அப்பொய்கையுள் அமுதசுரபி என்னும் அக்ஷய பாத்திரம் அமிழ்ந்திருக்கின்றது. அஃது ஒவ்வொருவருடத்திலும் புத்த தேவர் அவதார காலமாகிய வைகாசி சுத்த பூர்ணமை காள்தோறும் மேலே வந்து தோன்றுகின்றது ; அங்கள் இக் காளேயாம் ; அது தோன்றும் வேளையும் இதுவே இப்போது அப்பாத்திரம் அருளறம் பூண்ட உனது கரத்தில் வருமென்று கருதுகின்றேன். அதில் எடுக்கும் அன்னம் எடுக்க எடுக்க மேன்மேலும் வளர்ந்துகொண்டே வரும் ; அதன் வரலாற் றைப் பின்பு புகார் நகரத்து அறவணவடிகளிடம் கேட்டுணர் வாயாக,” என்று மணிமேகலைக்குச் சொன்னாள். சொல்லலும், மணிமேகலை அதனை விரைந்து பெறுதற்கு விரும்பிப் புத்த பீடிகையை வணங்கிக் கோமுகிப் பொய்கையை அடைந்து வலமாக வந்து கின்ற அளவில், அப்பாத்திரம் மணிமேகலையின் கையை அடைந்தது. உடனே அவள் அளவற்ற மகிழ்ச்சி எய்திப் புத்த தேவரின் திருவடிகளேத் துதித்து கின்ருள். இங்கனம் கின்ற மணிமேகலைக்குத் திவதிலகை,

' குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணே வீடு உம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்