உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

ஆணணி மாதரொடு புறங்கடை நிறுத்தும் பகிப்பிணி யென்னும் பாவி'

密”

னப் பசித்துன்பத்தின் கொடுமையையும்,

  • மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் இ கல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே.”

என அப்பசியை ஆற்றுவோரது சிறப்பையும் கூறி அறிவுறுத் தினுள்.

இதனை அறிந்த மணிமேகலை, குழந்தையின் முகத்தைக் கண்டு பால் சுரந்தளிக்கும் தாய் போல, ஏழைகளது முகத்தைக் கண்டு இரங்கி, இப்பாத்திரம் மேன்மேலும் அவர்களுக்கு அமுது சுரந்தளிக்கும் அற்புதத்தைக்காணும் விருப்புடை யேன்," என்று கூறித் திவதிலகையோடு சிறிது கோம் அள வளாவியிருந்து, அவளைப்பணிந்து விடைபெற்று,புத்த பீடிகை யைத் துதித்து, ஆகாய கமன மந்திரத்தை உருவிட்டு மேலெ முந்து ஆகாயவழியே புகார் ககரஞ்சென்று, தன் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மாதவி சுதமதி இருவரையும் கண்டாள் அவர்கள் வியப்படையும் வண்ணம் அவர்களுக்கு முற்பிறப்பைத் தான்் அறிந்தபடியே உணர்த்தி, இது ஆபுத் திரனது திருக்கரத்திலிருந்த அமுத சுரபி : இதனைத் தொழு மின்,” என்று அக்ஷய பாத்திரத்தைச் சுட்டிக் கூறித் தொழும் படி செய்தாள். பின்பு தவவழியைப் பெறும்பொருட்டு அற வணவடிகளே அடைவதற்கு அவர்களேயும் அழைத்துக்கொண்டு அவர் இருக்கும் இடத்தை விசாரித்தறிந்து, அவரைத் தரிசித் துப் பணிந்து, உவவனஞ் சென்றது முதல் மணிமேகலா தெய் வத்தால் மணிபல்லவஞ் சென்று புத்தபீடிகையைத் தரிசித்துப் பழம் பிறப்புணர்ந்து அமுத சுரபியைப் பெற்றது வரையு முள்ள நிகழ்ச்சிகளைக் கூறித் தனக்குத் தருமோபதேசம் புரிந்து ஆபுத்திரன் வரலாற்றையும் தெரிவிக்கும்படி வணங்கிக்கேட் டாள். அதற்கு அ. முனிவர் மகிழ்ந்து, "சில நாள் கழித்து உனக்குத் தருமோபதேசம் செய்வேன்; நீ உயிர்மருந்துபோன்ற தாகிய இவ்வமுத சுரபியைக்கொண்டு பசிப்பிணியை உலகில் ஒழிப்பாயாக." என்று கூறிவிட்டு மணிமேகலை விருப்பப்படி ஆபுத்திரனது வரலாற்றைக் கூறத்தொடங்கி, அவன் பிறந்த