உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஆர்லோவ் தம்பதிகள்

புனித மதத் தியாகி அர்ச். பார்பாராவை வேண்டிப் பிரார்த்தனே புரிவதுதான்்” என்ருள்.

"எவ்வளவோ பேர் சுத்தமாக வாழ்கிருர்கள். சுத்த மான காற்றையே சுவாசிக்கிருர்கள். எப்படியும் அவர் களும் செத்தே விடுகிருர்கள்' என்று கூட்டத்தில் ஒருவன் சொன்னன். -

ஆர்லோவ் தன் மனைவிக்கு அடுத்தாற்போல கின்று மாணவனேயே கவனித்தபடி மனசில் ஏதோ ள்.ண்ணிக் கொண்டிருந்தான்். அப்பொழுது தனது சட்டைக் கைய்ை யாரோ பிடித்து இழுத்ததை அவன் உண்ர்ந்தான்்.

சென்கா, தீக்கங்குகள் போல் மினுமினுக்கும் கண் களோடு அவனைப் பார்த்து ரகசியமாகப் பேசின்ை: "கிரிகரி மாமா. கிஸ்வியகோவ் செத்துப்போவான் என்றே. தோன்றுகிறது. அவனுக்கோ சொந்தக்காரர்கள் யாரும் கிடையாது. அவனுடைய வாத்தியம் யாருக்குச் சேரும்?'

"வாயை மூடுடா, போக்கிரிப் பயலே’ என்று ஆர்லோவ் அவனே ஒதுக்கித் தள்ளினன்.

விலகிச் சென்ற சென்கா, வாத்தியக்காரன் வசித்த அறையின் ஜன்னல் வழியாக உள்ளே கவனித்து, ஏதாவது தென்படுமா என்று தன் கண்களால் துழாவினன்.

  1. #

"சுண்ணும்பு, கீலெண்ணெய்...... என்று உரத்த குரலில் அடுக்கத் தொடங்கினன் மாணவன். . . . .

o: + 兴

குழப்பம் மிகுந்திருந்த அந்த நாளில், சாயங்கால வேளையில், இராச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, மேட்ரோன தன் கணவனிடம் விசாரித்தாள்: