பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரமுதலிக் கோட்பாடு 13 பகுத்துக் கூற இயலும். அனைத்துப் பொருள் மாற்றங் களையும் 1. பொருள் விரிவு, 2. பொருள் சுருக்கம், 3. மாறி வழங்குவது என்னும் முப்பிரிவுகளுக்குள் அடக்கலாம். அடிப்படையில் அகரமுதலி சொல்லைப் பற்றியது. ஒரு மொழியில் உள்ள சொற்களனைத்தையும் உள்ளடக்கியது அம்மொழிச் சொற்களஞ்சியம். ஒவ்வொரு சொல்லும் தனித்தனியான உருப்படி, இருந்தாலும் ஒவ்வொரு சொல்லும் பிற சொற்களோடு சேர்ந்து இயங்கும் தன்மை கொண்டது. ஒரு சொல் மற்ற சொற்களோடு சேராமல் தனியான இயக்கத்தைச் கொண்டிருக்காது. ஒரு சொல் குறிப்பிட்ட பொருள், குறிப்பிட்ட ஒலிவடிவம், குறிப்பிட்ட இலக்கண இயக்கம் ஆகியனவற்றைக் கொண்டிருக்கும். அகரமுதலியில் மொழி அலகு அதன் பொருள். அதைப் பயன்படுத்துவோர் பெறும் நடைமுறைப் பயன்பாடு ஆகியன தொடர்பாகத் தனியாக விளக்கப்படுகிறது. மொழியைக் கற்போர் அல்லது மொழிப்பரப்பை முழுவதுமாக அறிந்துகொள்வோர் ஆகியோர்க்குப் பயன்படும் வகையில் அகரமுதலி வடிவமைக்கப்படுகிறது. ஒரு சொல் பல்வேறு வகையான பண்புகளைக் கொண்டதாக இருக்கலாம். இவை அனைத்தும் அகரமுதலியில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தத் தேவையில்லை. அகரமுதலியைப் பயன்படுத்துவோர் தேவையை அறிந்து அதற்கேற்றாற்போல் அதை வடிவமைக்க வேண்டும். அகரமுதலி நடைமுறையில் (பேச்சில்) பயன்படுத்தும் வகையில், சொற்களை விளக்குகிறது. அகரமுதலி மொழி அலகுகள் முழுமையும் கொண்டதாக இருப்பது நல்லது. வரலாற்று அடிப்படையில் காலந்தோறும் சொற்கள் பொருள் நிலையில் மாற்றம் பெற்று வந்திருக்கின்றன. இதற்கு அவ்வக்கால வரலாற்றுச் சூழல் பெரும் உந்தாற்றலாக விளங்கி வந்திருக்கிறது. இவ்வாறு பொருள் மாறி வந்திருக்கும் தன்மையைக் கணக்கிற்கொண்டு அவ்வக்காலப் பண்பாட்டு, வரலாற்றுக் கூறுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கணக்கிட்டு அறிவதற்கு இலக்கியச் சொற்களே பெரும் துணை புரிகின்றன. பொருள் மாற்றத்திற்கு அடிப்படையான காரணம் மாந்தமனம்தான். ஒரு குறிப்பிட்ட சூழலில் பொருள் எவ்வகையில் மாற்றம் பெறும் என்பதை முன்கூட்டிச் சொல்ல இயலாது. அதாவது பொருள் மாற்றத்தைப் பற்றிய உறுதியான நெறிகள் எதையும் குறிப்பிட இயலாது. அதே நேரத்தில் பொருள் மாற்றம் ஏற்பட்ட பின்னர் நம்மால் விளக்க இயலும். பொருள் மாற்றத்தினைப் பலவகையாகப் பொருள் : ஒரு மொழியைப் பேசுவோர் தங்கள் மொழிச் செயற்பாட்டில் சொற்பொருளை நடுவக் கூறாகவும் முதன்மையான கூறாகவும் கொள்கின்றனர். எவ்வகையிலும் இந்த உயிர்ப்பான பகுதியை விட்டால் மொழிச் செயற்பாடு நிறைவுத் தன்மை கொண்டதாக இருக்காது. பொருள், அகரமுதலியின் நடுவப் பொருளாகவும் இன்றியமையாததாகவும் விளங்குகிறது. அடிப்படையில் சொற்களுக்குரிய பொருளைப் பார்க்கவே அகரமுதலியை நாடுகின்றனர். அகரமுதலியில் இடம் பெற்ற சொற்கள் அனைத்திற்கும் ஐயுறவிற்கு இடம் தராமல் தெளிவான பொருள்கள் தரவேண்டும். ஒரு சொல்லின் வடிவத்திற்கும் அது உணர்த்தும் பொருளுக்கும் உள்ள தொடர்பைப் பலவாறாக விளக்குகின்றனர். ஒரு சொல்லில் பொதிந்துள்ள பண்புகள் அனைத்தையும் கூர்ந்து நோக்கி அவற்றிற்கு ஏற்றாற்போலப் பொருள் தருவது சிறப்பு. பொருள் வரையறையைப் பார்த்தமட்டில் அது குறிக்கும் சொல்லின் முழுப் ப.பன்பாடு தெரிய வேண்டும். எ-டு: அம்பு என்ற சொல்லின் பொருள் வரையறை "வில்லிலிருந்து விடக்கூடிய கூரிய முனையுள்ள நேரான படைக்கலம்” என்றமையும் போது அச்சொல்லைப் பற்றிய முழுமை படிப்பவர்க்கு ஏற்படுகிறது. ஒரு சொல்லின் பொருள் விளக்கம் முழுதையும் கவனித்து அவற்றுள் பொருத்தமான பண்புகள் பொருள் வரையறையாகத் தரப்படுகின்றன. சொற்பொருள் வரையறையில் அகரமுதலி தொகுப்போர் இயல்பிற்கேற்பப் பொருத்தமான வரையறையிலிருந்து மாறிச் செல்வதற்கும் இடமுண்டு. எ-டு : மரத்தாலான இருக்கை, நான்கு கால்களுடையது, உட்காருவதற்குப் பயன்படுவது, முதுகு சாய்வதற்கு ஏற்றாற்போல் பின்புறம் பலகை உள்ளது, பெரும்பாலும் முழங்கை வைப்பதற்கு இருபக்கமும் சட்டங்களைக் கொண்டது என்றாற்போலப் பல தன்மைகளைக் கொண்டது நாற்காலி. இருந்தாலும் நான்கு கால்கள் அடிப்படையில் அது நாற்காலி எனப் பெயர் கொண்டுள்ளது.