பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயன் தேவநேயன் இத் 'தேய்' அடியினின்றே தெய்வப் பெயர் தோன்றிற்று. தேய் - தேய்வு - தேவு - தேவன். தேய்வு - தெய்வு - தெய்வம். தேவு - தே = தெய்வம், தலைவன் பால் வரை தெய்வம் வினையே பூதம் (தொல். 341) தெய்வம் உணாவே மாமரம் புட்பறை (தொல். 964) தெய்வம் அஞ்சல் புரையறத் தெளிதல் (தொல், 1218) வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப (தொல். 1367), யகர வொற்றுள்ள தெய்வப் பெயரே பெரும் பான்மையாகவும், தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே (தொல். 1395) என வகர வொற்றுள்ள பின்னை வடிவு அருகியும், இதுபோதுள்ள தமிழ் நூல்களுள் முந்தியதாகிய தொல்காப்பியத்துள் வருதல் காண்க, சமற்கிருதம் - deva, daiva இலத்தீன் - dues = god கிரேக்கம் (Greek) - theos = god 'தேவ' என்னும் சொற்குச் சமற்கிருதத்திற் காட்ட ப்படும் div (to be bright) di, dip (to shine) என்னும் வேர்ச்சொற்கள் முதற் பொருளன்றிவழிப்பொருளே கொண்டுள்ளமையின் பொருந்தாமை காண்க பின்வரும் சித்திய (scythian) ஆரியச் சொற்கள், 'தி' (நெருப்பு) என்னும் தமிழ்ச் சொற்கு இனமானவை எனக் கால்டுவெல் கண்காணியார் காட்டுவார். சித்தியம்: சாமாயிதே (Samoiede) - tu, tui, ti, ty மஞ்சு {Manchu) - tua அங்கேரியம் (Hungarian) - tuz ஓசுத்தியக்கு (Ostiaky - tut துங்க சு (Tungus) - togo இலசுக்கியம் (Lesghian) - tze, zi, zie ஆரியம்: கேலிக்கம் (Gaelic) - teire வேலிசு (Welsh) - tan பாரசிகம் (Persian) - tigh. நேயன் நள் - நண் - நண்பு - நட்பு நள்ளுதல் = அடைதல், பொருந்துதல், நட்புக் கொள்ளுதல், செறிதல் நள்ளார் = பகைவர். நள்ளி = உறவு (சூடா.) நள்ளிருள் = செறிந்தவிருள் (திருக்கோ 156, சிலப். 15:105) நள்ளுநர் = நண்பர் (திவா). நள் - நளி. நளிதல் = செறிதல். நள் - நெள் - நெய் = ஒட்டும் நீர்மப் பொருள் (oil, ghee), கருப்புக் கட்டிச்சாந்து. நெய்தல் = இணைத்தல், நூலை இணைத்து ஆடையாகச் செய்தல், நெய் = குருதி, நெய்த்தோர் (நெய்த்துவர்?) = குருதி. அகரம் எகரமாதலை, பரு - பெரு, சத்தான் - செத்தான் என்னும் திரிபுகளிற் காண்க.) ளகர மெய்யீறு யகர மெய்யீறாவதை, கொள் - கொய், தொள் - தொய், பொள் - பொய் முதலிய திரிபுகளிற் காண்க. நெய் - (நெய்ஞ்சு) - நெஞ்சு - நெஞ்சம் = விலாவெலும்புகள் இணைக்கப்பட்ட இடம் அல்லது அன்பிற்கிடமாகக் கருதப்படும் நெஞ்சாங்குலை (hcart) உள்ள இடம். நெய் - நேய் - நேயம் = அன்பு. ஈரம் பசை முதலிய சொற்கள் ஒட்டும் பொருளையும் அன்பையும் குறித்தல் காண்க. அன்பு, இருவரை அல்லது பலரை இணைப்பது. நேய் - நே = அன்பு. நேயம் - நேசம் ய - ச, ஒ.நோ: நெயவு - நெசவு நேசம் - நேசி நேசித்தல் = அன்பு கடாத்தல், விரும்புதல். 'நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவார்' (தாயுமானவர்) நேயம் - நேயன். நேசம் - நேசன். நேயம் என்னும் தென்சொல் வடநாட்டுத் திரவிடத்தில் வழங்கி, பின்னர்ப் பிராகிருதத்திலும் தொடர்ந்து, இறுதியில் சமற்கிருதத்திற் புகுந்து 'ஸ்நேஹ' என்று வழங்குகின்றது. இவ்வரலாற்றை அறியாதார், பேரன் பாட்டனைப் பெற்றான் என்பது போல், ஸ்நேஹ (சமற்) - நேயம் (பிராகிருதம்) - நேயம் (தமிழ்) எனத் தலைகீழாய்த் திரிப்பர். இங்ஙனமே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியிலும் உண்மைக்கு மாறாகக் காட்டப்பட்டுள்ளது. பகுத்தறிவும் நடுவு நிலைமையுமுள்ள அறிஞர் உண்மை கண்டுகொள்வாராக நேயம் வடசொல்லாயின் 'நெய்' என்பதும் அதன் அடிவேரான 'நள்