பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவற்றின் படிநிலை வளர்ச்சியாகத்தான் கொள்ள வேண்டும். இன்று கிடைக்கும் இலக்கிய இலக்கணங்களின் காலத்திற்கு முன்பு பன்னெடுங்காலமாக இலக்கிய இலக்கணங்கள் இருந்திருக்க வேண்டும். அதற்குமுன் பல நூறு ஆண்டுகள் தமிழ் வெறும் பேச்சு மொழியாக இருந்திருக்க வேண்டும். அந்தப் பழங்காலத்துத் தமிழின் இயல்பான நிலையை அறிவதற்குப் பெருமளவில் உதவுவது பாவாணர் காட்டும் கட்டடிக் கொள்கை வழியிலான வேர்ச்சொற்களேயாகும். வண்ணனை மொழியியலடிப்படையில் வேர் காண்பது சொல்லின் பகுதிவரைதான் செல்லமுடியும். அதற்குமேல் வேர்மூலம் காண்பதற்குத் தேவநேயரின் கட்டடிக் கொள்கையால் மாத்திரமே இயலும். தெய்வம் என்னும் சொல்லைத் தெய் + அம் என்ற அளவில் பிரிக்கலாம். இதற்குமேல் வேர் சொல்வதற்கு வண்ணனை மொழியியலில் வழியில்லை. ஆனால் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், தெய்வம் என்னும் சொல் 'தீ' என்னும் சொல்லிலிருந்து பிறந்தது என்று காட்டி, தீதல் = எரிதல், கருகுதல் தீத்தல் எரித்தல், கருக்குதல் தீதல், தீத்தல் = தீய்த்த விளக்கு தீ --> தீய் -> தீய்தல் = தீ – தீவு - தீவம் = ல் இனி, தேய் – தீய் – தீ என்றுமாம். தேய் – தேயு = நெருப்பு (பிங்.) தேய் -> தேய்வு - தேவு = 1. தெய்வம் (பிங்.) 2. தெய்வத் தன்மை . தேவு – தேவன் = கடவுள், அரசன், கணவன், தலைவன். தேவி = தெய்வ மகள், அரசி, தலைவி. தேய்வு – தெய்வு -> தெய்வம் என்று விளக்குவார். பண்டையுலகில் நெருப்பே தெய்வமாகவும் தெய்வ வடிவங்களாகவுங் கொள்ளப் பெற்றதென்று பழங்காலத்துப் பண்பாட்டு நிலையைச் கட்டி அதற்குச்