பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொட்டிமை 131 தொட்டில் தொட்டிமை tottimai, பெ. (n.) 1. ஒற்றுமை (சூடா.); uniformity, unison. "தொட்டிமை யுடைய வீணை ” (சீவக 2047), 2. அழகு; beauty. "தொட்டிமை கலந்த தூசு" (பெருங். உஞ்சைக். 50, 8). [துள் + தொள் – தொடு – தொட்டி - தொட்டிமை (மு.தா. 1961 தொட்டியக்கரு' tottiya-k-karu, பெ. (n.) கெடுதல் சூழியத்தில் பயன்கொள்ளுங் கரு (யாழ். அக.); articles used in witchcraft (தொட்டி – தொட்டிய + கரு தொட்டியக்கரு' tottiya-k-karu, பெ. (n.) தொட்டி வித்தையிற் சொல்லிய உகிர், மயிர், பிண்டம், தலை, மண்டையோடு முதலிய கரு; the essential parts or material parts multilated from the human body such as nails hair foetus or embryo skull etc., required in the performance of magic by a class of people known as tottis (கம்பளத்தார்) (சா.அக.). [தொட்டி - தொட்டிய + கரு) தொட்டியச்சி totriyacci, பெ. (n.) தொட்டிச்சி (வின்) பார்க்க ; see totticci [தொட்டிச்சி – தொட்டியச்சி) தொட்டியச்செம்பு tottiya-c-cembu, பெ. (n.) தொட்டிச்செம்பு பார்க்க; see totri-c-cembu (சா அக.). [தொட்டிச்செம்பு – தொட்டியச்செம்பு) தொட்டியம்' tottiyam, பெ. (n.) மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதி (Nels); a country identified with the western portion of Madurai District. 2. ஒரு மொழி (யாழ். அக.); a language. 3. கெடுதல் சூழியக் கலை (வின்.); witchcraft and legerdemain தொட்டியம்' tottiyam, பெ. (n.) கெடுதல் செய்யும் சூழியம், தன் வயப்படுத்தல், குறி முதலிய கலைகளைக் கற்றுப் பழகிய கம்ப ளத்தார்; a treatise on mantric science or magic containing the art of witchcraft sorcary necromancy, love philter etc., (சா அக.), தொட்டியக் கலையைக் கற்றதனால் இச்சாதியருக்கு இப்பெயர் அமைந்தது போலும். தொட்டியர் tottiyar, பெ. (n.) ஒரு குலத்தினர்; people of totti caste. தொட்டியலை totti-y-alai, பெ. (n.) ஒரு மீன்பிடி வலை ; kind of fishing net (மீனவ.). [தொட்டிவலை – தொட்டியலை] தொட்டியவித்தை tottiya-vittai, பெ. (n.) தொட்.டியச் சாதியார் செய்யும் கெடுதல் சூழியம், கருவேலை முதலிய கலை முறைகள்; the various performances in sorcary witch craft etc., done by the class of people known as tottiyas. தொட்டியப் பேய் சுடுகாடு மட்டும் - (பழ) [தொட்டியார்) + வித்தை, விச்சை – வித்தை , ஒ.நோ. அச்சன் - அத்தன்) தொட்டியன் tottiyan, பெ. (n.) ஆந்திர நாட்டில் உழவுத் தொழில் செய்துவந்து மதுரை நாட்டில் நாயக்கன் என்ற பெயர் கொண்டு வாழுமொரு குலத்தான் (E.T.); pcrson of a Telugu caste of cultivators, settled in the western part of the Madurai District, who assume the tittle Nāyakkan தொட்டில்' tottil, பெ. {n.) குழந்தைகளைப் படுக்க வைத்து ஆட்டற்குரிய மஞ்சம் அல்லது தூளி; cradle, swinging cot for an infant. “கிடக்கிற் றொட்டில் கிழிய உதைத்திடும்" (திவ். பெரியாழ். 11, 9) தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் (பழ.), தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுவான் (பழம் மறுவு. ஏணை ம., க., து. தொட்டில்; தெ., தொட்டிலா,