பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

முனைவர்.பு.ஏ. இராமையா, இ.ஆ.ப., அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி பண்பாடு (ம) அறநிலையத் துறை மற்றும் இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு) பதிப்புரை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம். நாளும் உணவு தேடி நாடோடிகளாய் வாழ்ந்த மாந்தவினம், குழுவாய்க் கூடிவாழ முற்பட்டுக் குமுகாயத் தோற்றத்தையுண்டாக்கிக் கொண்டபோது, தங்களுக்குள் கருத்து மாற்றம் நிகழ்த்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவாகியது. அப்போது, கையாலும் வாயாலும் சைகை காட்டித் தம் எண்ணங்களை வெளிப்படுத்தினர். அதனைச் 'சைகைமொழி' அல்லது ‘இயற்கைமொழி' என்றனர். காலப்போக்கில் வெறுக்கும் பொருளைச் 'சீ' என்றும், வியக்கும் பொருளை 'ஆ' என்றும், வெகுளிச் சுவையிற் 'போ' என்றும், உள்ளம் மகிழ்ந்தபோது 'வா' என்றும் இன்னும் பிறவாரும் சொற்களமைத்தனர். இவற்றைச் சுவை வகையில் தோன்றிய சொற்கள் என்றனர். இந்த வகையிலேயே உலகின் முதன்மொழி உருவானது என்பது மொழியாராய்ச்சியாளர்களின் ஆய்வு. இவ்வாறு மக்களது இயற்கை வேட்கையில் தோன்றி, அவரவர் நாகரிக முன்னேற்றத்திற்கேற்ப வளர்ந்து வரும் மக்களாக்கப் பொருளே மொழியாகும். உலக முதன்மொழி தமிழே! இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழே! திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழே என்று ஆணித்தரமாக சான்றுகளுடன் எடுத்துரைத்த மாபெரும் சான்றோராகிய ‘மொழி ஞாயிறு', தேவநேயப் பாவாணர் அவர்கள் காட்டிய வழிகளில், இந்நூலில் வேர் விளக்கம் தரப்பட்டுள்ளது. இன்றைக்குக் கோயிலில் செய்யப்படும் கும்பாபிடேகம் என்னும் '‘குடமுழுக்கு', தமிழில் ‘நீர்த்தெளி’என்றே முற்காலத்தில் வழங்கப் பெற்றதென்பதைக் கல்வெட்டுச் சான்றுகளுடன் 'நீர்த்தெளி' எனும் சொல் தலைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. 'நில்' என்னுஞ் சொல்லுக்கும், 'நிமிர்' என்னும் சொல்லுக்கும் 'நீர்' என்னும் சொல்லுக்கும் வரையறுக்கப்பட்டுள்ள பொருள் விளக்கங்களும் இலக்கிய மேற்கோள்களும் கற்குந்தோறும் களிப்பூட்டும் வகையில் தரப்பட்டுள்ளன. நிலையம் என்னும் சொல்லை நிலயம் என தவறான வடிவில் வழங்கி அது வடசொல்லென மயங்கியிருத்தலை மாற்றியமைத்து, அது தென்சொல்லேயென நிறுவப்பட்டுள்ளது. |