பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

//2// தேவநேயப் பாவாணரின் கருத்துப்படி, சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலியையும், சாம்பசிவம்பிள்ளை மருத்துவ அறிவியல் அகரமுதலியையும் அடிப்படையாகக் கொண்டு, பிந்தைய அகரமுதலியில் ஆளப்பட்டுள்ள சொற்களுள் தமிழ்ச்சொற்களை மட்டும் தொகுத்து இவ்வகரமுதலிப் பகுதி அணியப்படுத்தப்பட்டுள்ளது. சொல்லுக்குப் பொருள் விளக்கங்கள் உரிய வகையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றை மெய்ப்பிக்கும் வகையிலான இலக்கிய மேற்கோள்களும் நாட்டு மக்களிடை வழங்கும் பழமொழிகளும் உலக வழக்குத் தொடர்களும் ஆங்காங்கே இணைக்கப்பட்டுள்ளன. உ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி வரிசையில் அனைத்து மடலங்களும் செந்தமிழின் தரத்தை உலகோர் உணரும் வகையில் திகழ்கின்றன. பேரகரமுதலி வெளியீடுகள் வரிசையில் நி, நீ வரிசையான இந்நூல் பதினான்காவது வெளியீடாகும். பேரகரமுதலியின் எஞ்சிய தொகுதிகள் யாவும் நான்காண்டுக் கால வரம்பெல்லைக்குள் முடிக்கப்பெறும் என்று அரசு அறிவித்த வண்ணம், திட்டமிட்டவாறு இலக்கினை எய்துதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்முயற்சியில் உறுதுணையாயிருந்த மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கும் எனது இதயங் கனிந்த நன்றி. இந்நூல் வெளிவர அயராதுழைத்த அகரமுதலித் தொகுப்பாளர் (பகுதிப் பொறுப்பாளர்), பதிப்பாசிரியர்கள், உதவிப் பதிப்பாசிரியர்கள் மற்றும் திட்டப் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டிட நான் கடமைப்பட்டுள்ளேன். மேலும், இந்நூலை நன்முறையில் அச்சிட்டுத் தந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை -07-2005 (பு.ஏ. இராமையா)