பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிணவுதி 14 நித்தநிமந்தம் நிணவுதி ninavudi, பெ. (n.) நிணத்திசு | நித்தக்கருமம் nitta-k-karumam, பெ. (n.) (இ.வ.) பார்க்க; see nina-t-tisu. நிணவை ninavai, பெ. (n.) 1. பிணிப்பு (பெருங். உஞ்சைக். 34, 144.); tying, bondage. 2. பின்னிச் செய்யப்பட்டது; that which is plaited. அம்பணை மூங்கிற் பைம்போழ் நிணவையும் (பெருங். உஞ்சைக்.42,20). [நிணர் → நிண → நிணவை.] நிணறு ninaru, பெ.(n.) 1. உருக்கம்; affection, love. “அவன் நெஞ்சம் நிணறு கொண்டு பேசினான்" (வின்.). 2: நலம்; benefit, good. “கிணறு வெட்ட வேணும் நிணறு சொன்னேன்" (இராமநா. உயுத்.23). தெ. நெனறு [ நில் நிணம்→ நிணர் நிணறு. நிணர் = கட்டு, இறுக்கம், செறிவு, நட்பு. நிணனுகுகுருதி ninanugu-kurudi, பெ.(n.) நிணத்தோடு கலந்து உகா நின்ற குருதிப் பலி; sacrifer with fat stained blood. “நிணனுகு குருதிகொ ணிகரடு விலையே" (சிலப்.12:19). நித்தக்கட்டளை nitta-k-kattalai, பெ. (n.) நாள்தோறுமாய ஏற்பாடு (வின்.); daily allotment, whether of allowance or expense. ( நித்தம் + கட்டளை.) நில் → நிற்றல் → நித்தல் → நித்தம். கள் → கட்டு → கட்டளை = முறைமை; முறையான செலவு. நித்தக்கத்தரி nitta-k-kattari, பெ. (n.) பெரிய கத்தரி; long brinjal. (சா.அக.). 1. அறநூல்களில் விதிக்கப்ட்டதும், செய்யாமற் போவது கரிசெனக் கருதப்படுவதுமான செயல்; a constant act or duty enjoined by sastras, non-performance of which is considered a sin.2. நாள்தோறும் செய்வதான செயல்; daily duties enjoined by sastrās. ( நித்தம் + கருமம்.) நில்நிற்றம்→நித்தம். ஒ.நோ. வெல் வெற்றம் கொல் கொற்றம் குற்று குத்து முற்றகம் முத்தகம் பீற்றல் பீத்தல். குல் குரு கரு கருமம். கரு கருத்தல் - செய்தல். நித்தக்காய்ச்சல் nitta-k-kāyccal, பெ.(n.) நாளும் அடிக்கும் காய்ச்சல் (வின்.); quotidian fever. [ நித்தம் + காய்ச்சல்.] நில் நிற்றல் நித்தல் (நித்தன்)→நித்தம். நித்தத்துவம் nittattuvam, பெ.(n.) என்றுமுளதாந் தன்மை; eternity. "நிராமய மான நித்தத்துவம்" (உத்தரரா.திக்குவி. 248.). [ நித்தம் + தத்துவம்.] நில் நிற்றல் நித்தல் (நித்தன்)→நித்தம். நித்தநிமந்தம் nitta-nimandam, பெ. (n.) நித்தியக் கட்டளை; daily offerings in a temple. "மகாதேவர்க்கு நித்த நிமந்தஞ் செலுத்துகைக்கு” (S.I.II:392) ( நித்தம் + நிமந்தம்.) நில் → நிற்றல் நித்தல் (நித்தன்)→நித்தம்.