பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிணந்தவை 13 நிணந்தவை ninandavai, பெ. (n.) தெற்றின | மாலை; garland. "நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க மணந்தவை போல வரைமலை யெல்லாம்" (பரிபா.19:80). நிணந்து ninandu, வி.எ. (adv.) பிணித்து; bond. “நிணந்தெ னெஞ்ச நிறை கொண்ட கள்வனை” (சீவக.பதுமை 144.). நிணநரம்புகள் nina-narambugal, பெ. (n) ஊன் நரம்புகள்(M.L.); Iymphatic vessels; absorbents. {நிணம் + நரம்புகள்.] நிணநீர் nipanir, பெ. (n.) குருதியில் சென்று சேரும் வெள்ளையணுக்களைக் கொண்ட நிறமற்ற நீர்மம்; lymph. (நிணம் + நீர்.] நிணநெய் nina-ney, பெ. (n.) மணிக்கட்டு களிலுண்டாகும் பசை (M.L.); synovia. (நிணம் + நெய்.) நிணப்பு ninappu, பெ. (n.) கொழுப்பு; fat. (சா.அக.). [நிணம் +நிணப்பு.] நிணம் nigam, பெ. (n.) 1. கொழுப்பு; fat "நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்து (பு.வெ.3,5.). 2.ஊன்; flesh. “மைந்நிண விலைஞர்" (மணிமே.28:33.). 3. ஊனீர் (வின்.); serum. ௧. நிணெ ம., க.நிணம்; க.நிணெ; து. நிணம்; கோத. நினிக்; நிணல் நிணம்படுகுருதி ninam-padukurudi, பெ. (n.) குருதி கலந்த கொழுப்பு; fat stained with blood. "பிணஞ்சமந் தொழுகிய நிணம்படு குருதியிற் கணங் கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட" (சிலப்,26:209.). [நிணம்படு + குருதி] நிணமுருக்கு ninam-urukku, பெ. (n.) உடம்பிலுள்ள கொழுப்பைக் கரையும்படி செய்யும் ஒரு நோய்; a disease lending to decrease fat in the system, a wasting dis- ease as tuberculosis etc. 2. உடம்பின் கொழுப்பைக் கரையச்செய்யும் மருந்து; any medicine prescribed for reducing the fat in the body. (சா.அக.). [நிணம் + உருக்கு.) நிணமூரி nina-mūri, பெ. (n.) நிணத்தின் துண்டம்; a piece of fat. "மூடைப் பண்ட மிடை நிறைந்தன்ன வெண்ணின மூரி யருள" (புறநா.393.). [நிணம் + மூரி.] நிணர்1-தல் ninar-, 2 செ.கு.வி. (v.) கட்டுதல்; to tie, fasten. “பட்டு நிணர்கட்டில்” (சீவக. 2030.). து. நிணே, நிணெ, நினெ; துட. நின், நிணர்?-தல் ninar-, 2 செ.கு.வி. (v.i.) செறிதல்; to crowd, gather thick. “எங்கணு நிணர்ந்த பூங்குளி நில்" (திருவானைக். நாட்.109). நிணல் ninal, பெ. (n.) சாயை; shade. [ நில் நில நிழல் → நிணல்.] → ->