பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

129

அக்குரோணிகள் கணக்குள்ள யுதிஷ்டிரர் திறத்தில் உயிர்தப்பினோர் 11 அக்குரோணிகள் அடங்கிய துரியோதனன் திறத்திலோ அசுவத்தாமன், கிருபர், கிருதவர்மா என்ற மூவர்களே பிழைத்தனர்

யுத்தத்திற்குப் பின்னுள்ள நிகழ்ச்சிகளும் கிருஷ்ணன் தன் சுற்றத்தாருடன் அழிந்துபோன வரலாற்றையே முக்கியமாகக் கொள்ளுகின்றனவாகையால் துன்பியல் பெருங்காப்பிய வகைக்குப் பாரதமே ஒப்பற்ற உதாரணமாகும் பாரதக் கதையை ஆராயும் அறிஞர்களுக்கு, 'உலக வாழ்க்கையில் காணப்படும் உறவும், அறமும், அறிவும், ஆற்றலும் பயனற்றவை அவற்றை விட்டுப் பகவானை இடைவிடாமற் பக்தி செய்வதே பிறப்பின் பயன்’ என்பது நன்கு புலப்படும் அவ்வித அறிவு தலையெடுக்கவேணுமென்ற வகையிலே பாரதத்திலுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியும் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, பாரதப் பெருங்காப்பியத்திற் பரவியுள்ள சுவை சாந்தமே என்கிறார் ஆனந்தவர்த்தனர் என்ற அணியாசிரியர் இந்த ரசம் வெளிப்படையாகத் தோன்றாவிடினும், தொனியால் கிடைக்குமென்றும், இந்த பாரதத்தில் வாசுதேவன் மகனான கிருஷ்ண பகவானே எங்கும் கீர்த்தனம் செய்யப்படுகின்றார், என்று கவியே தொடக்கத்தில் கூறியிருப்பது, இந்த வித ரச முடிப்பிற்கு ஆதாரம் அளிக்கின்றதென்றும் அவர் நன்கெடுத்துக் காட்டுகின்றார்

வால்மீகியின் இராமர் வில்லும் கையுமாய்த் தாமே நேர் நின்று, தேவர்கள் காரியமான இராவண வதத்தைச் செய்து முடிக்கின்றார் வியாசர் கிருஷ்ணர் பாண்டவர்கள் வேள்வியில் குற்றேவல் புரிந்தும், திருதராஷ்டிரரிடம் அவர்களுக்காகத் தூது நடந்தும், போர் மூண்ட காலத்தில் அருச்சுனனுக்குத் தேர் நடத்தியும், பூமியின் பாரம் நீங்குவதற்கு ஏதுவாகின்றார்

கீதையைப் பாடும்போதும், விசுவரூபம் கொள்ளும் போதும், சூதாட்டத்தில் திரெளபதியைத் துச்சானன்

செ பெ- 9