பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

செந்தமிழ் பெட்டகம்

அகராதிமுறை நமக்கு எளிதாகத் தோன்றுகிறது ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்திருக்கிற தமிழ்-இலக்கியங்களின் சரித்திரத்தில் இந்த அகராதிமுறை கி பி 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் முதன்முதல் புலப்படுகிறது அப்பொழுதும் இம்முறை அரைகுறையாய்த்தான் கையாளப்பட்டது சொற்களின் முதலெழுத்து ஒன்றன் முறையையே ஆசிரியர்கள் நோக்கி வந்தனர். உதாரணமாக, அறிவன், அடியான், அருள், அவன், அஃது, அமர் முதலிய சொற்களை, முதலெழுத்தாகிய அகரம் ஒன்றையே நோக்கி, அவற்றை ஒரு முறையில் அமைத்தனர், இரண்டாவது முதலிய எழுத்துகளைக் கருதினார்களில்லை முதலெழுத்து முறையை அகராதி நிகண்டில் காணலாம் இதனால் அகரத்தில் தொடங்கும் ஒரு சொல்லைக் குறித்த ஓரிடத்தில் கண்டுபிடிப்பது எளிதிற் கூடுவதாயில்லை இரண்டாம் எழுத்தையும் நோக்கிச் சொற்களை முறைப்படுத்திய ஒரு நூல், அதற்குச் சுமார் நூறு ஆண்டுகளின் பின்னர்த் தோன்றியது இதன் பெயர் 'அகராதிமோனைக் ககராதி எதுகை' என்பது இம்முறையிலேயும் ஒரு சொல்லைக் குறிப்பிட்ட ஓரிடத்தில் காணுவதற்கு இயலாமலிருந்தது முதன் முதலில் சொற்களின் எழுத்துகள் அனைத்தையும் நோக்கி அகராதி முறையைக் கையாண்டவர்கள் 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஐரோப்பியப் பாதிரிகளேயாவர்

இவர்கள் கையாண்ட முறையில் நமக்கு விளைந்த நன்மைகள் பல முதலாவது, பிற மொழிகளில் செப்பமாக அமைந்துள்ள அகராதி முறையைத் தமிழ் அகராதியிலும் கையாள முடிந்தது இரண்டாவது, பாதிரிமார்களுக்குத் தமிழ் புதிய வேற்று மொழியாகையினாலே, இம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் இவர்கள் பொருளுணர வேண்டியவர்களாயிருந்தனர். ஆகவே, அருஞ்சொல், எளியசொல்