பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

153

நூற்றாண்டுக்குப் பிந்தாத சேரன் செங்குட்டவன் காலச் சிலப்பதிகாரத்தில் ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள.(11:19-20) பேசப்படுகிறது. இன்னம் இக்கடல் கோள் 24 நூற்றாண்டுகளுக்கு முந்கிய முல்லைக் கலியிலும் வருகிறது.

       மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வெளவலின்
       மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம்பட
       புலியொடு வில்நீக்கிப் புகழ் பொறித்த கிளர்கெண்டை
       வலியினால் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்'(கலி.104)

கூடல் மதுரைக் கடைச்சங்கப் பாட்டுக்கள், கி.மு. முதல் 5-6 நூற்றாண்டுவரை பழமை உடையன. அவற்றுள் சில கடல்கோளுக்கு முந்திய கபாடப்பஃறுளி நாட்டுப் பாண்டியரை நேரில் பாராட்டிப் பாவலர் பாடியவை. முடிகொண்ட மூவரையும் அவரவர் குடிக்குச் சிறப்புரிமை பூண்டு வறளாது புரண்டோடும் பேராற்றைச் சுட்டி, அதன் மணலிலும் பலவாண்டு வாழ்திர் எனப் பாடுதல் பண்டைப்புலவர் கொண்ட மரபு. ஆன்பொருநையைச் சேரருக்கும், காவிரியைச் சோழருக்கும் சுட்டுதல்போலக் கடல்கோளுக்கு முந்திய குடும்பப் பாண்டியனுக்கு வையையைப் பேசாமல் அவன் காலப் பஃறுளி மணலினும் பலவாய்ச் சிறக்க நின் ஆயுள் என வாழ்த்திய நச்செள்ளையாரின் புறப் பாட்டு (புறம் 9 அக்காலம் பஃறுளி யாற்றுடன் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ளுமுன் பாண்டியர் சுபாடபுரத்திலிருந்து தென்பொருனை என்னும் தாம்பிர பருணிக்குத் தெற்கேயிருந்த நாட்டை ஆண்டதற்குச் சான்று பகரும். அது நற்றிணையிலும் புறப்பாட்டுக்ளிலும் சுட்டப்படுவ தால் அறியலாம்.

அன்றியும், கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்த வான்மீகரும், தாம்பிரபருனியைத் தாண்டித் தெற்கே-