பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

செந்தமிழ் பெட்டகம்

வெறுத் தக்க - பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு'(குறள் 993), ‘அரம்போலும் கூர்மையே ரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லாதவர்' (குறன் 997) இவை இறவாக் குறள் அறநூற் கூற்றுக்கள் இம்மக்கட் பண்பாம் ஒழுக்கத்தினை திணையாக்கி, உயர்ந்த ஒழுக்கம் உடைய மக்களை குறிக்கும் சொற்களை உயர்திணை எனவும், பிற எல்லாச் சொற்களும் திணை (ஒழுக்கம்) அல்லாதன (குறியாதன) அதாவது அல் தினைச் சொற்கள் எனவும் தொல்காப்பியர் கூறினர் 'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே’ என்பது தொல்காப்பியர் விதி மக்களை சுட்டுவனவாம் சொற்கள் மட்டுமே உயர்திணை எனப்படும் என்று அவர் தெளிவாக விளக்கியுள்ளார் இத்தமிழ் மரபறியாத வட நூலறிவு நிறைந்த பெரும் பண்டிதர்கூட, சொற்களைவிட்டு, ‘மக்கள்தேவர் நரகர் உயர்திணை' எனக்கூறுவர்

முதலில் இலக்கண நூல் சொற்களையே குறிக்கும் அன்றிப் பொருட்பாகுபாடு சுட்டாது தேவரும் நரகரும் யாவரும் ஆகுக, அவரைப் பற்றிய பேச்சுக்கு இலக்கண நூலில் இடமில்லை ஒழுக்கம் மக்கள் பண்பு அதனால் அப்பண்புடைய மக்களை மட்டும் சுட்டும் சொற்களை உயர்திணை எனச் சுட்டும் தொல்காப்பியர் இம் மரபறியாமல், இழிவொழுக்குடைய தரகரை உயர்திணை யாக்கியதோடமையாமல் ஒடுக்கமே குறியாத மரம், மண் முதலிய பொருள்களை எல்லாம் அல்திணை எனவும் ‘இழிதிணை எனவும் சுட்டினர் பின் நூலார் (நன்னூல் 245 ஆம் சூத்திரம் காண்க) பெயர்ச் சொற்களுக்கு இடம் பால் வகைகள் எங்கும் உண்டு எனில் திணைப் பிரிவு வேறு

எந்த மொழியிலும் இயலாத தமிழின் தனிச் சிறப்பு அம் மரபறிந்து ஐயம் திரிபுகளுக்கிடமின்றித் திணையை விளக்கியவர் தொல்காப்பியர் பொருளைக் குறிப்பதே சொல்லின்நோக்கம், சொல்லின் உறுப்பு எழுத்தாதலால், அவர் எழுத்தை முதலில் சுருக்கியும், அடுத்துச்-