பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

163

சொல்லைப் பெருக்கியும், இறுதியில் கருதும் பொருளை வகுத்தும் பொருள் குறிக்கும் சொல் தொடர் முறைகளைத் தொகுத்து விளக்கியும் நூலெழுதி உள்ளார் முதலில் எழுத்துப் படலத்தில் தனி உயிர்க்குறில் 5 அவற்றின் நெடில் 5, அ+இ, அ+உ எனும் இணையுயிர் 2 ஆக உயிர்வகை 12 இனத்துக்கு 6 வீதம், வன்மை, மென்மை, இடைமை என முத்திறத் தொலிக்கும் மெய் 18: ஆய்தம் 1 ஆக எழுத்து 31 தாமே இயங்கவும், ஒன்றை இயக்கவும் பயன்படு மெழுத்தை உயிரெனவும், உயிரின்றி இயங்கா எழுத்தை மெய் எனவும், தனக்கு உருவின்றி ஆயும் நுண் ஒலியுடை ஒன்றை ஆய்தம் எனவும் முறையே எழுத்துக்களுக்கு மூன்று பெயரிடப் பெற்றன எழுத்துக்களின் பிறப்பும், புணர்ப்பும், வரிசையும், வகுப்பும் எல்லாம் இப்படலத்துள் அடங்கும்

இரண்டாவது சொல்லின் படலம், திணை, பால், எண், இடம் எனும் வகை விளக்கியும், பெயர்களை அவற்றின் வேற்றுமை வகையொடும், செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருளென்று ஆறும் தரும் வினைகளைத் தெரிநிலை, ஏவல், வியங்கோள் வகையுடன் அவற்றின் முதல், ஈறு, இடைநிலை, சாரியை, சந்தி வேறுபாடெனும் வகை ஆறோடும், பெயர், வினை இரண்டின் எச்சங்களோடும், இடை, உரி இனவகை, பயன் இவை எல்லாம் விளக்கியும், சொல்லின் இலக்கணம் எல்லாம் வகுத்தார் இயற்கை, திரிபு, திசை, வட சொற்கள், நான்கும், அவற்றின் பொருட்கிடை நான்கும், தொகை வகை ஆறும், எச்சம் ப்த்தும், சொற்களின் மரபும் ஆட்சியும் விளக்கித் தொகுத்தார்

மூன்றாவதாக, முடிவில் பொருட் பகுதி மக்கள் வாழ்வொடு தொடர்புடைய எல்லாம் பொருள் என்று எண்ணப்படும் எனவே, வாழ்வொழுக்கமும் அறமும் பொருள் வகையாகும் பால் வேறுபட்டால் இயற்கைப் பண்பால் ஒன்றி ஒருப்படும் ஒழுக்காறனைத்தும் அகத்திணை எனப்படும். பால் இயலன்றி மக்களின் மற்றக்