பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

167


‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று சிறப்புப் பாயிரம் கூறுவதால் வடமொழி இலக்கணமாகிய ஐந்திர வியாகரணத்திலே இவர் சிறந்த புலமை பெற்றவரென்பது கொண்டு, இவர் வட மொழியிலும் தமிழிலும் சிறந்த புலமை பெற்றவரெனலாம் சிலர் ‘ஐந்திரம்’ என்பது ‘ஐந்திறம்’ என்றிருக்கலாமென்று கருதுகின்றனர் ஐந்திறம் என்பது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐவகையிலக்கணத்தைக் குறிக்குமென்பது அவர் கருத்து

அகத்தியர்மாணவர் பன்னிருவரில் தொல்காப்பியர் ஒருவரென்பர் தொல்காப்பியம் என்னும் நூலையே அன்றி, பன்னிருபடலத்தில் உள்ள வெட்சிப் படலத்தையும் இவரியற்றினரென்பர் உரையாசிரியர் இளம்பூரணர் தொல்காப்பிய கருத்துக்கு முரணான படல அமைப் புள்ள பன்னிருபடலத்தில் தொல்காப்பியரைச் சேர்ப்பது தவறென்று மறுக்கிறார்

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்று வழங்குவது வடமொழியிலக்கணமாக தத்திதாந்தப் பெயராக இருக்கிறதென்றும், இவ்வாறு ஒரு பழைய தமிழிலக்கணத்திற்குப் பெயர் வழங்கியிராதென்றும் ஆசிரியர் பெயரால் வழங்கவேண்டுமாயின் தொல் காப்பியர் என்றே நூலுக்கும் வழங்கியிருக்க வேண்டு மென்றும், தொல்காப்பியமென்பது பிற்காலத்திய பிழை பட்ட வழக்கென்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர் தொல்காப்பியரின் காலத்தையோ சமயத்தையோ அறியமுடியவில்லை சிலர் கி மு ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டிருக்கலாமென்கின்றனர்

பரிதி

என்பவர் திருக்குறளுக்கு உரையெழுதிய பதின்மருள் ஒருவராவர் இவர் பருதி’ எனவும் வழங்கப்படுவர். இவர், பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பரிமேலழகர்க்கு முற்பட்டவராவர் இதனைச்