பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

செந்தமிழ் பெட்டகம்

ரொட்லர் என்பவரால் இயற்றப்பட்டது இதனைத் திருத்தஞ் செய்வதற்கு இரண்டு தமிழ்ப் பண்டிதர்களையும் ஹக்நெஸ், ராபர்ட்ஸன் என்பவர்களையும் நியமனஞ் செய்தனர் முதற்பகுதி கவர்னர் ஜெனரல் பென்டிங் பிரபுவிற்கு உரிமையாக்கப்பட்டு 1834-இல் வெளிவந்தது ராபர்ட்ஸன் இறந்துபோகவே, டெய்லர் பாதிரியாரும் வேங்கடாசல முதலியாரும் இவ்வகராதி வேலையை மேற்கொண்டனர்

ரொட்லர் அகராதி வெளிவந்த சில காலத்திற்குப் பின்னர்த் தமிழ்-ஆங்கில அகராதிக்காக யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் சார்பில் தொகுக்கப்பட்ட சொற்களை வின்ஸ்லோ சென்னையில் 1862-இல் பதிப்பித்தனர் இப்பதிப்பு வேலையில் பல சிறந்த வித்துவான்கள் பலவாறு உதவி செய்துவந்தனர் இவர்களில் இராமாநுஜ கவிராயர், விசாகப் பெருமாளையர், வீராசாமிச் செட்டியார் முதலிய அறிஞர்களை இங்கே குறிப்பிடல் தகும் இவ்வகராதியில் 67,452 சொற்கள் உள்ளன இருவகை வழக்கிலுமுள்ள சொற்கள் மிகக் கூட்டப்பட்டன; பலவகையான சாஸ்திரச் சொற்கள் விளக்கப்பட்டன; ஆசிரியர்கள், புலவர்கள், வீரமக்கள், தெய்வங்கள் முதலியோர்களின் பெயர்களும் இதில் சேர்க்கப்பட்டன

மேற்குறித்த அகராதிகளேயன்றித் தமிழ்-லத்தீன் அகராதிகளும் தோன்றின. பெஸ்கி சுமார் 1742-இல் இவ்வகை அகராதியொன்றும் 1744-இல் தமிழ்-பிரெஞ்சு அகராதி ஒன்றும் போர்ச்சுகேசிய-லத்தின்-தமிழ் அகராதி ஒன்றும் இயற்றி முடித்தனர் பெஸ்கி, ரொட்லர், வின்ஸ்லோ என்ற மூவர் இயற்றியவைகளைப் பயன்படுத்தி ஆர் பி குரி என்ற பாதிரியார் ஒரு தமிழ் லத்தீன் அகராதி இயற்றி நாகப்பட்டிணத்திலிருந்து 1867-இல் வெளியிட்டனர் இவ்வாறே, தமிழ்-பிரெஞ்சு அகராதிகள் வேறு சிலவும் வெளி வந்துள்ளன.