பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

செந்தமிழ் பெட்டகம்

அரண்மனைக்குள் புகுகின்றோம் கஜலட்சுமியின் தோற்றம், யானை போகும்வாயில், புதுமணல் பரப்பிய முற்றம், மலைபோல் விளங்கும் அரண்மனை, யவனர் ஏற்றிய பாவை விளக்கு, அஃது எரிகின்ற காட்சி இப்படியெல்லாம் கண்டு அரசி படுத்திருக்கும் கட்டிலுள்ள அறையைக் காண்கிறோம், பலப்பல சித்திர வேலைப்பாடைந்த கட்டிலில் புனையா ஓவியம் போலத் தலைவி மங்கிக்கிடக்கின்றாள் செவிலித் தாயார் ஏதேதோ சொல்லிப் பார்க்கின்றனர் மேலே சூரிய வீதியும், அதிலே திங்களோடு பிரியாது இருக்கும் உரோகிணியையும் அரசி காண்கின்றாள் பின் ஏதோ நினைந்து பெருமூச்சு விட்டுக் கண்ணீரை விரலால் கீழே தெரிக்கின்றாள்

“உலகத்தின் இயற்கை மட்டும் அன்று; அண்டங்களின் இயல்பும் இதுதான்" என்று தனக்கும் அண்டத் திற்குமாக வருந்தி, அதில் ஓர் ஆறுதல் பிறக்கக் காண்கிறான் வெளிச்சத்தில் புண்பட்ட வீரரையெல்லாம் சுற்றிப் பார்த்து வருகின்றான் யானையும் குதிரையும் மழையில் நனைகின்ற துளி இவன்மேல் விழுகின்றது எல்லோர்க்கும் அன்புரை கூறிப் புத்துயிர் கொடுத்துப் பிரிந்து வருகின்றான் அரகன் “கண்டவரை யெல்லாம் உடன் பிறந்தாராகக் கொண்டு வாழ்கின்ற இந்த அரசர் வாழ்வு அண்டங்களோடு தன்னை உடன் பிறப்பாகப் கொள்ளும் அரசியின் வாழ்விற் கெனவே வெற்றியோடு முடிவதாக" என அரசியைச் சேர்ந்தோர் கொற்றவையை வேண்டிக்கொள்ளுகிறார்கள் இந்த வேண்டுகோளுடன் இந்தப்பாடல் முடிகின்றது இவ்வாறு அனைத்தையும் ஒன்றகக் காணும் காட்சியும் புறத்தேயுள்ள துன்பத்தோடு அரசியின் உள்ளத்தே ஓங்குகின்ற துன்பத்தையும் ஒன்றுபடுத்தும் காட்சியும், இயற்கையை இருந்ததனை இருந்தபடி கூறும் ஆற்றலும் நக்கீரருக்கு இறவாப் புகழைத் தருவதனை இப்பாட்டில் காண்கின்றோம்

தலைவனும் தலைவியும் பிரிந்து நின்று, அந்தப் பிரிவை எண்ணுகின்றது பாலை ஒழுக்கத்தைக் கூறுவது