பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

செந்தமிழ் பெட்டகம்

மயிலை நாதரும் இடுகுறி யாற் பெயர்பெற்ற நூலுக்கு உதாரணமாக 'நிகண்டு, கலைக்கோட்டுத் தண்டு’ என்பவற்றைக்காட்டியுள்ளார். இந்த இரு குறிப்புக்களையும் இணைத்துப் பார்க்கும் பொழுது, கலைக் கோட்டுத் தண்டனார் என்பவரால் இயற்றப்பெற்ற நிகண்டு ஒன்று வழங்கியதாதல் வேண்டும் என்று ஊகிக்கலாம் இந்நூலைப்பற்றி வேறு எவ்வகையான செய்தியும் தெரியக்கூடவில்லை

பழைய நிகண்டு நூலாகிய திவாகரம் பன்னிரண்டு தொகுதியாகப் பிரிக்கப்பட்டுச் சூத்திரயாப்பில் அமைந்துள்ளது திவாகரரது சூத்திர அமைப்புத் தொல்காப்பியரது முறையைப் பின்பற்றியதாகும் தொல்காப்பியச் சூத்திரங்கள் சிலவற்றையும் இவர் தம் நூலுள் அமைத்துக்கொண்டுள்ளனர் இவரது அமைப்பு முறைதான் பிற்கால நிகண்டுகளுக்கு எல்லாம் மூல அளவையாய் அமைந்து நிற்கின்றது

திவாகரர் தமது நூலைத் தெய்வப் பெயர், மக்கட் பெயர், விலங்குப் பெயர், மரப்பெயர், இடப்பெயர், பல்பொருட் பெயர், செயற்கை வடிவப் பெயர், பண்புப் பெயர், செயல் பற்றிய பெயர், ஒலிபற்றிய பெயர், ஒருசொல் பல்பொருட் பெயர், பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர், எனப் பன்னிரண்டு வகையாகப் பகுத்துச் சொற்களைத் தொகுத்துள்ளனர்

தெய்வப் பெயரில் சிவன், திருமால் முதலிய தெய்வப் பெயர்களோடு நாள் கோள்களின் பெயர், காலப்பெயர், பருவப் பெயர், மழை, மேகம் முதலியவற்றின் பெயர்களையும் தந்துள்ளனர் மக்கட் பெயர்த் தொகுதியில் மக்களின் உறுப்புக்களுக்கு உரிய பெயர்களையும் தொகுத்துள்ளார் விலங்குப் பெயரில் மிருகம், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, இவற்றின் உறுப்புப்பெயர் ஆகியனவும், மரப் பெயர்த் தொகுதியில் மரம், செடி, கொடி, பூ, காய், கனி, தானியவகை முதலியனவும் இடம்பெற்றுள்ளன இடப்பெயர்த்-