பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/288

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

செந்தமிழ் பெட்டகம்

அடைதற்குரிய வழியின் நிலையினையும்; எம்மாவீடு, ஒழிவில்காலம், நெடுமாற்கு அடிமை, வேய்மரு தோளிணை என்னும் இந்நான்கு திருப்பதிகங்களும் தடைகளின் நிலையினையும் கூறுவனவாம் மற்றை எண்பது திருப்பதிகங்களும் இவ் வைந்து பொருள்களையும் விரித்துக் கூறுகின்றன. இவற்றுள் முக்கிய நோக்கம் வீடாகிய பேறு மற்றைய நான்கு பொருள்களும் அதன் பொருட்டுக் கூறப்படுகின்றன

இனி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி என்னும் மூன்று பிரபந்தங்களில், தனி மந்திரங்கள் மூன்றனுள், திருமந்திரம், சரமச்லோகம் என்னும் இரண்டு மந்திரங்களின் பொருள்களை அருளிச்செய்து, இறுதிப் பிரபந்தமாகிய இத்திருவாய் மொழியில், மந்திர ரித்தினமாகிய துவயத்தின் பொருளை அருளிச்செய்கிறார் என்றும் கூறுவர் பெரியோர்

‘ஸ்ரீமந்நாராயண சரணெள சரணம் பிரபத்யே, ஸ்ரீமதே நாராயணாயநம: என்னும் மந்திர ரத்தின மாகிய துவயத்தின் பின் வாக்கியத்தின் பொருளைத் திருவாய்மொழியின் முதன் மூன்று திருப்பதிகங்களாலும், முன் வாக்கியத்தின் பொருளை அதற்குமேல் மூன்று மூன்று திருப்பதிகங்களால் உபாயத்திற்குத் தகுதியாக இறைவனுடைய குணங்களையும், ஆன்மாவிலும் ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் தமக்கு நசை அற்ற படியையும், அவனோடு தமக்குண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச்செய்து, பத்தாவது திருப்பதிகத்தால் தாம் வேண்டினபடியே, ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு திருமோகூர் என்னும் திவ்விய தேசத்திலே தங்கு வேட்டையாக வந்து தங்கி, இவர்க்கு அர்ச்சிராதி கதியையும் காட்டிக்கொடுத்து, இவர் வேண்டிக் கொண்டபடியே ‘என் அவா அறச் சூழ்ந்தாயே என்று இவர்தம் திருவாயாலே அருளிச்செய்யும்படி பேற்றினை அளித்தபடியை அருளைச்செய்திருத்தல் இங்ஙனம்