பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

செந்தமிழ் பெட்டகம்

நின் கனிவாய் முத்தந்தனக்கு விலையில்லை’ என்ற கருத்துப் படப் பாடும் திறம் போற்றுதற்குரியது நூலின் பல விடத்தும் ஆசிரியரின் தெய்வ வழிபாட்டையும் இன்சொல் திறத்தையும் காண முடிகிறது

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களியற்றிய சேக்கிழார் பிள்ளைத் தமிழென்னும் நூலில், ஆசிரியர் சேக்கிழாரின் சைவ சித்தாந்தப் பேரறிவையும், அவரியற்றிய திருத்தொண்டர் புராணம் மக்களது அறியாமையைப் போக்க உதவும் சிறப்பினையும் தெளிவாகக் கூறுகின்றனர்

சேக்கிழார் தமது நூலின் அவையடக்கத்துப் பாடிய ‘செப்பலுற்ற பொருளின்’ என்ற பாட்டைத் தொடர்பு படுத்திச் செங்கீரைப் பருவத்துப் ’பொருவரிய தொண்டர்கள் புராணத்து’ என்ற பாடலைப் பாடியிருக்கும் நயம் போற்றற்குரியது இது பெரியோர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அமையும் நூல்களில் சிறப்பானது