பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இலக்கணக்
கொத்து

தொல்காப்பியம், திருக்கோவையார், திருவாசகம் முதலான சிறந்த நூல்களில் அருகிவரும் இலக்கண விதிகளைத் தொகுத்துக் கூறுவது இது நுன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் படித்த பிறகே படிக்கத்தக்க தென்பர் இதன் ஆசிரியர் வடமொழியிலக்கணங்களில் உள்ள சில விதிகளும் இந்நூலில் இருக்கின்றன. இதன் ஆசிரியர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த ஈசானமடம் சுவாமிநாத தேசிகர் ஆவர் இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் இயற்றியுள்ளனர். இவர் கருத்தையும் விதிகளையும் சிவஞான போதப் பேருரையாசிரியர் சிவஞான முனிவர் எடுத்தாள்வதால் சிவஞான முனிவருக்கு இவர் முற்பட்டவர் (17ஆம் நூ பிற்பகுதி). நன்னூல் விருத்தியும் செய்த சங்கர நச்சிவாயர் இவருடைய மாணவராவர்.

இலக்கணம்

மொழிகளைக் கொண்டே நாம் எண்ணவும், எண்ணியவற்றைப் பிறர்க்கு உரைக்கவும் செய்கின்றோம் அந்த மொழிகளின் இலக்கணத்தைத் தெளிவாக்கிக் கொள்ளாவிட்டால் நம்முடைய எண்ணமும் பேச்சும் தெளிவாக இரா இலக்கணம் என்பது ஒரு பதத்தாற் குறிக்கப்படும் பண்புகளின் விளக்கமாகும்

இலக்கணம் பலவகைப்படும். சிலர் ‘அனுபானம் அல்லது உடன்பருகுவது' என்பது போன்றதைச் சொல்