பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

செந்தமிழ் பெட்டகம்

சான்றுகளாலோ, மொழிபெயர்ப்பு நூல்களாலோ முற்றிலும் உணரமுடியாத உண்மைகளாகும் இவை முன்னோர் எழுதிவைத்துச் சென்ற நூல்களைப் படிப்பதனால் மொழிப்பற்றும் அதன் வாயிலாக நாட்டுப்பற்றும் விளைப்பதும் தாய்மொழிப் படிப்பின் நோக்கமும் பயனுமாகும்

திராவிடர்:

தென்னிந்தியாவில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றவர்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழி பேசுகின்றவர்கள். திராவிடர் யாவர்? அவர் தென்னிந்தியப் பழங்குடி மக்களா? அல்லது மிகப் பலர் கூறியிருப்பது போல, வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்களா? அங்ஙனமாயின், எங்கிருந்து வந்தனர்? எக்காலத்தில் வந்தனர்? என்று நீண்டகாலமாக அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர் ஆயினும், இது காறும் ஒரு திட்டமான முடிவு ஏற்படவில்லை

திராவிடர் தென்னிந்தியப் பழங்குடி மக்களேயன்றிப் பிறநாட்டிலிருந்து வந்தவரல்லர் என்ற கொள்கையுடையவர் பின்வரும் ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர் புவியியலார் கருத்துப்படித் தென்னிந்தியா மிகப் பழமையானது இங்குத் தொன்மை மிக்க பழங்காலப் பாறைகளைக் காண்கிறோம் மானிட இன வர்ணனை வல்லாரும் ஆதி மக்களினம் தோன்றிய இடங்களில் தென்னிந்தியா ஒன்றெனக் கருதுகின்றனர் ஆகையால், தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை உருவாக்கிய திராவிடர், வழிவழியே இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வாழ்ந்த ஆதி மக்களே

மேற்கு ஆசிய மக்கள் சிலருடைய பண்டைய வழக்கங்கள் தென்னிந்தியருடைய பண்பாட்டோடு ஒத்திருப்பதை இவர்கள் ஒப்புக்கொள்ளுகின்றனர் ஆனால் அவர்கள் அதற்குக் கூறும் காரணம்