பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

செந்தமிழ் பெட்டகம்

திராவிடர்கள் இங்ஙனம் மத்தியதரை நாடுகளிலிருந்து வந்தனராகில் பண்டு சிந்துநதிப் பள்ளத்தாக்கில் ஓங்கி வளர்ந்திருந்த நாகரிகத்தோடு இவர்களுக்குத் தொடர்பு ஏதேனும் இருந்ததா? இது பெரிய விவாதத்திற்குரியது சர் ஜான் மார்ஷல் உட்படத் தொல் பொருள் ஆராய்ச்சி வல்லுநர் பலர் திராவிடர்களே இந்நாகரிகத்தைத் தோற்றுவித்தவரெனக் கருது கின்றனர். ஆனால் திராவிடர்கள் இந்தியாவிற்குக் கி.மு 20ஆம் நூற்றாண்டின் பின்னரே வந்தவர்களென்றால் ஏறத்தாழக் கி மு 3000 ஆண்டுக்கு முன் தோன்றிய சிந்து வெளி நாகரிகத்தை அவர்கள் தோற்றுவித்தாரெனக் கூறுவது சிறிதும் பொருந்தாது

எனினும் மத்தியதரை நாகரிகம், சிந்து வெளிநாகரிகத்தின்மீது பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தது மறுக்க முடியாதது கட்டட முறை, தெய்வ வழிவாடு முதலியவற்றிலிருந்து இது தெரியவருகின்றது ஆனால் சிந்துவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தவர் மத்திய தரை நாட்டு மக்கள் மட்டுமல்ல பல இன மக்கள் சேர்ந்து உருவாக்கியதாகவே காணப்படுகின்றது அவர்களில் முக்கியமாக ஆஸ்திராலாயிடு பழங்குடி வகையினர், ஆல்ப்பைனர், மங்கோலியர், மத்தியதரையினர் ஆகியோரனைவரும் கலந்திருந்தனர் ஒருவேளை திராவிடர்கள் புறப்படுவதற்கு முன்னரே மத்தியதரை மக்களில் ஒரு கூட்டத்தார் நாடோடிகளாக வந்து, சிந்து நதிக்கரையில் குடியேறி, அதற்கு முன்னிருந்த பண்டைய ஆஸ்திரலாயிடு மக்களோடும் மங்கோலியரோடும் கலந்திருக்கலாம்

ஏறத்தாழக் கி மு பத்தாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை அடைந்ததாகக் கருதப்படும் திராவிடர் விரைவில் சிறந்த நாகரிகத்தை உருவாக்கினர் முன்னர் ஆங்காங்கிருந்த ஆஸ்திரலாயிடு பழங்குடி மக்களின் சில பழக்க வழக்கங்கள் திராவிடரது பண்பாட்டோடு கலந்தன சில காலம் சென்ற பின், அதாவது ஏறத்தாழக்