பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

75

பெயரடைப் பொருள்களிலும் வழங்கக்கூடிய பெற்றியை உடையன சீன மொழியில் உள்ளவற்றைப் போல் எல்லாச் சொற்களும் ஒவ்வோர் அசையால் மாத்திரம் இயன்றன அல்ல செமிட்டிக் மொழிகளில் அடிவேர்களின் இடையே சேர்க்கப்படுகிற உயிரொலிகளின் காரணமாகப் பொருள் வேறுபாடு உண்டாதல் இல்லை அடிவேர்கள் இந்திய-ஐரோப்பிய மொழிகளிற் சொல்லின்கண் எங்கேயாவது ஒனித்துக் கொண்டிருப்பதைப் போலன்றித் திராவிட மொழிகளில் அடிவேர்கள் சொல்லின் முதலிலேயே நிற்றலை எளிதிற் காணலாம் அடிவேர்களில் உள்ள உயிரொலியின் நீட்டமோ குறுக்கமோ சொற்கள் பலவற்றிலும் பெரும்பாலும் அவ்வாறு காணப்படுகிறது (த பெறு-பெறுகிறான் பெற்றார்-பெறுவான்-பெறுதல்) சில வேளைகளில் அடிவேரில் உள்ள உயிரொலியை நீட்டினால் தொழிற் பெயர்கள் பிறக்கும் (த பெறு-பேறு) அடிவேரில் உள்ள ஈற்று மெய்யெழுத்தை இரட்டித்தால் சில இலக்கண வேறுபாடுகள் விளைகின்றன. அவையாவன: 1. பெயர்ச் சொல்லைப் பெயரடை ஆக்குதல் (மாடு தோல்-மாட்டுத் தோல்) 2 செயப்படுபொருள் குன்றிய வினையைக் குன்றாவினை ஆக்குதல் (ஓடு-ஓட்டு) 3 இறந்தகால வினை ஆக்குதல் (புகு-புக்கான்) 4 தொழிற் பெயர்கள் உண்டாக்குதல் (எழுது-எழுத்து)

பெயர்ச்சொற்களில் எண்ணையும் பாலையும் சேர்த்து உணர்த்துவதற்காக ஒரே இலக்கணக்கூறு பயன்படுகிறது (அவன் வந்தான்-ஒருமையும் ஆண்பாலும் உணர்த்தப்படுகின்றன) ஆண்பாற் பன்மைக்கும் பெண்பாற் பன்மைக்கும் பொதுவாக ஒரே ஈறு வழங்கப்டுகிறது (த அர்; தெ அரு) அஃறிணைப் பன்மையைக் காட்ட வ் வழங்குகிறது (ப த அவ்; இ. த அவை, ம அவ, தெ அலி, க அவு,கோ அவ்; பார்ஜி அவ்)

வடமொழியில் ஒரே இலக்கணக்கூறு எண்ணையும் வேற்றுமையையும் உணர்த்துவதாய் இருப்பவும்,