பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

85

டொன்று கலந்து, குழைந்து, ஒன்றுபட்டுப் போவதும் உண்டு; அல்லது, அவை சேர்ந்து நின்ற போதிலும் தனித் தனியே பிரிக்கக் கூடியவாறு ஒட்டி நிற்பதும் உண்டு; அல்லது அவை ஒன்றோடொன்று சேராமல் தனித்தனியே இருப்பதும் உண்டு இந்த மூன்று வகையும் உட்பிணைப்பு, ஒட்டு, தனிநிலை என்று கூறப்படும்

நெடுங்காலத்துக்கு முன்பே இலக்கிய வளம் பெற்று விட்ட மொழிகளில் ஒட்டும், தனிநிலையும் மிகுதியாக இருக்கும் சொற்கள் ஒன்றுசேர்ந்து, கலந்து குறைந்து விடாததற்கு முன்பே, அவற்றிற்கு நிலை பேறான வாழ்வு தந்து, தெளிவாக இலக்கியத்தில் எழுதி வைத்து விட்டதே அதற்குக் காரணம் ஆகும் அவ்வாறு செய்வதால் அவை பிரிக்க முடியாதவாறு குழைந்து திரிந்துவிட இடம் இல்லாமற் போகிறது தமிழ் மொழியில் அவ்வாறு அமைந்த ஒட்டுச்சொற்களே மிகுதியாக உள்ளன

சீன மொழியில் தனி நிலைச் சொற்களே மிகுதி வில்லி (வில்+இ), செய்திடுவான் (செய்+த்+இடு+வ்+ஆன்) முதலானசொற்கள் ஒட்டுச்சொற்களாகும் நீ, போ, முள், எடு முதலானவை தனிநிலைச் சொற்கள் தனிநிலைச் சொற்கள் பெரும்பாலும் ஓரசைச் சொற்களாகவே இருக்கும் ஆயிற்று என்பது ஆச்சு என்று திரிவதும், கொண்டுவா என்பது கொணா என்று திரிவதும் உட்பிணைப்பாகும் இவ்வாறு பிரிக்க முடியாதவாறு உள்ள திரிபுகள் தமிழில் குறைவு; மற்ற ஐரோப்பிய மொழிகளில் அவைகளே மிகுதியாக உள்ளன

அடிச்சொற்களோடு மற்றச் சொற்கள் சேர்வதால், சொற்களின் பொருள் சிறிது சிறிதாக வேறுபடுகிறது நட என்னும் அடிச்சொல்லின் பொருள் வேறு நடை, நடைக்கு, நடையால், நடக்கை, நடப்பு, நடத்தல், நடமின், நடந்தேன், நடக்கும், நடப்பார் முதலான சொற்களின் பொருள்கள் வேறு; அவை சிறிது சிறிதாக வேறுபடுதல் காணலாம் சேரும் மற்றச் சொற்களில் சிலவற்றிற்குப் பொருள் உண்டு; சிலவற்றிற்குப் பொருள் இல்லை. ஐ,