பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

செந்தமிழ் பெட்டகம்

மாகின்ற அநாதி வாசனாரூபமாகிய காதல் முதலிய பாவமே ரஸம் என்று அறுதி செய்யப்பட்டுள்ளது

இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடு உண்டு விபாவம் முதலியவற்றைச் சுவைத்தலில் நல்லறிஞன் தனக்குத் துஷ்யந்தன் முதலானவரோடு அபேதம் கற்பிப்பதனால் சகுந்தலை முதலானவர் விஷயமான காதலே. ரஸம் என்பது அமைவுடையதாகக் கொள்ளப்படுகிறது

‘இருவகை நிலத்தின் இயல்வது சுவையே' என்பதற்கு, 'உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் சுவையெனப்படும்' என்னும் இளம்பூரணர் உரையே அமைவுடையதாகும் ஈண்டு, உய்ப்போன் என்றது நடிகனை நடிகன் செய்யும் அபிநயம் முதலியவற்றால் அச்சுவை காண்போர்க்கு உண்டாதல் கூடும்.

இனி, ரசத்தின் வகைகளை நோக்குவோம் ரசம் ஒன்பது வகையாகும் அவை:

1 சிருங்காரம் - உவகை

2 கருணம் - அழுகை

3 வீரம் - பெருமிதம்

4 ரௌத்திரம் - வெகுளி

5. ஹாஸ்யம் - நகை

6 பயானகம் - அச்சம்

7 பீபத்ஸம் - இளிவரல்

8 அற்புதம் - மருட்கை

9 சாந்தம் - சமநிலை

என்பன இவற்றுள் சாந்த ரஸம் உலகியலின் நீங்கினார் வெற்றியாகலின் அதனை யொழித்து, ஏனைய எட்டடனையுமே பரதமுனிவர் தமது நூலில் கூறியுள்ளார் ஆசிரியர் தொல்காப்பியனாரும் அவ்வாறே எட்டு ரஸங்களைக் கூறியிருக்கின்றார்