120
செந்தமிழ் பெட்டகம்
கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்த அசுவகோஷர் எழுதிய சாரீ புத்திப்பிரகரணம், ராஷ்டிரபால பரிபி ருச்சா முதலியவற்றைப் பார்த்தால், இவற்றில் அடைந்த தேர்ச்சிக்கு ஆதாரமாகச் சில நூற்றாண்டுகள் இடை விடாமல் இந்த நாடகக் கலை வளர்ந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது பல பண்டை நாடகங்கள் மறைந்தே போயின. காளிதாசன் தனக்கு முன்னால் செளமில்லன், கவிபுத்திரன் என்று இரு சிறந்த நாடகக் கவிகன் இருந்ததார்கள் என்று மாளவிகாக்கினி மித்திரத்தில் சொல்லுகிறான்.
இந்தியாவில் சமஸ்கிருதத்தில் இவ்வளவு பழைய நூற்றாண்டுகளில் நாடகம் இருந்திருக்க வேண்டுமானால் அது கிரேக்கருடையவோ, சகருடிடையவோ தொடர்பிலிருந்துதான் ஏற்பட்டிருக்கும் என்று சில மேனாட்டு ஆராய்ச்சியாளர் கருதுவர்; ஆனால் நடுநிலை நோக் குடன் ஆராய்ந்த கீத் முதலிய மேனாட்டு அறிஞரோ இதை ஏற்பதில்லை. கிரேக்க நாடகத்தில் தலை சிறந்தது, தலைவன் தலைவிகளின் சாவில் முடியும் துன்பியல் என்ற வகை; இது சமஸ்கிருதத்தில் இல்லவே இல்லை. இடம், காலம் இரண்டும் மாறாமல் ஒன்றாகவே கிரேக்க நாடகத்தில் இருக்க வேண்டும்; இதையும் சமஸ்கிருதம் முற்றும் புறக்கணிக்கிறது. இடம் மாறினாலும் அங்கம் மாறாது. அங்கத்திற்குள்ளே கனம் என்று சிறு பிரிவுகள் இல்லை.
சமஸ்கிருத அரங்கு சுமார் 30 வகை ஆட்ட வகைகளைக் கொண்டது. எல்லாவிதமான சுவை, கதை, அமைப்பு வகைகளிலும் ஏராளமான கற்பனைச் சித்திரங்களை எற்படுத்தியுள்ளனர். முதன்மை பெற்ற நாடகம் உயர்ந்த பர்த்திரமான இராமன், துஷ்யந்தன் போன்றவர்களின் ஒழுக்கத்தை மக்களுக்குச் சித்திரித்துக் காட்டும். பிரகரணம் என்பது மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களைக் காதல், நகை, கருணை முதலிய சுவைகளுடன் சித்திரித்துக் காட்டும், பிரகசனம், நகைச்