பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

செந்தமிழ் பெட்டகம்


சங்கத்தார் தொகுத்த கலிப் பாட்டு நூற்றைம்பது எனப் பேராசிரியரும் (செய்யு 149, 153, 154, 155, 160), இறையனார் அகப்தொகை நூல்களிற் போலப் பாடல்களில் சிதைவும் குறைவும் இன்றி, கலி நூற்றைம்பதும் இப்பொழுதும் வழங்குவது தமிழ் மக்களின் தவப்பயன் எனலாம்

நூற்றைம்பது பாடல்களுள் முதற் பாடல் கடவுள் வாழ்த்து, பின்னர், பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், என்ற வரிசையில் ஐந்திணைகளுக்கும் உரிய பாடல்கள் அமைந்துள்ளன. இவை முறையே 35, 29, 35, 17, 33 பாடல்களைக் கொண்டுள்ளன. இப் பகுதிகளை மருதக் கலி (செய்யு. 155), முல்லைக் கலி (செய்யு. 156), என வழங்கியதோடு மருதப் பாட்டு (செய்யு, 160), முல்லைப் பாட்டு (செய்யு. 154, 155), குறிஞ்சிப் பாட்டு (செய்யு. 160), எனவும் பேராசிரியர் தமது உரையில் வழங்கியுள்ளனர்.

பெருங் கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி;

மருதன் இளநாகன் மருதம்; அருஞ்சோழன்

நல்லுருத்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல்-

கல்வி வலார் கண்ட கலி.

என வழங்கும் பாடல் ஐந்திணைப் பகுதிகளும் வெவ்வேறு ஆசிரியர்களால் பாடப் பெற்றவை எனக் கூறுகின்றது. இதனைத் தொகுத்தார். தொகுப்பித்தார் பற்றிய குறிப்பு நூல் இறுதியில் காணப் பெறவில்லை. உரையாசிரியராகிய நச்சினார்கினியர் குறிப்பிலிருந்து நெய்தற் பகுதியைச் செய்த நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடி, இத் தொகையைத் தொகுத்தார் என்று கொள்ள இடந்தருகிறது.

கலித்தொகையை முதன் முதலாகப் பதிப்பித்த (1887) சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் 'நல்லந்துவனார் கலித்தொகை' என்றே குறித்துள்ளனர். பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களும் தாம் ஆங்கிலத்தில்