பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

செந்தமிழ் பெட்டகம்


என்ற பொருளைப் பெற்றிருக்கிறது. மிகப் பழைய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் இச்சொல் பன்முறை வழங்கப் பெற்றுள்ளது. 'கோவலன் கூறும் ஒர் குறியாக் கட்டுரை' (சிலப்2:37) என்றவிடத்து அடியார்க்கு நல்லார் கட்டுரை என்னும் சொல்லுக்குப் பொருள் பொதிந்த சொல்’ அதாவது விளங்கும் வகையில் ஒரு பொருளைக் குறித்துக் கூறுவது என்று ப்ொருள் செய்கின்றார். இப்பொருள் காரணமாகவே போலும் பிற்காலத்தில் வியாசம்’ என்றபொருளிலும் இச்சொல் பயன்படலாயிற்று.

இன்று நாம் கட்டுரை என்ற சொல்லுக்கு வழங்கும் பொருளும் சிலப்பதிகாரத்தே கிடைக்கிறது.மதுராபதித் தெய்வம் வீரபத்தினியின் பின்புறம் வந்து தோன்றிக் கோவலன் இறந்த காரணத்தைக் கூறும் பகுதி கூடக் ‘கட்டுரை காதை' என்ற பெயருடன் பேசப்படுகிறது. அதாவது பெரிய அளவிற் கூறப் பெற்ற பகுதிகளைச் சுருக்கிக் கூறும் பொழுதும் கட்டுரை என்ற சொல்லைச் சிலப்பதிகாரம் பயன்படுத்துகிறது. அந்நூலின் மூன்று காண்டங்களின் இறுதியிலும் கட்டுரை என்ற தலைப்புடன் அவ்வக்காண்டங்களில் முடிவுகள் கூறப் பெறுகின்றன. நூலின் முடிவிலும் 'நூற் கட்டுரை’ ஒன்றுள்ளது. ஆனால் இந்நூல் முழுவதிலும் பாடல் வடிவிலேயே கட்டுரை உள்ளது.

இந்நூலை அடுத்துக் கட்டுரை போன்ற பகுதியுள்ள நூல் யாது? என்று இன்று அறியக் கூடவில்லை. ஒருவேளை தகடூர் யாத்திரை போன்ற 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' நூல்களில் இருந்திருக்கலாம். அடுத்து இறையனார் களவியல் உரையில் கட்டுரை என்று கூறத்தக்க பகுதிகள் பல அமைந்துள்ளன.

உரையாசிரியர்கள் அனைவருமே கட்டுரை என்ற சொல்லைப் பயன்படுத்தாவிடினும்.அழகிய கட்டுரைகள் வரைந்துள்ளனர். சேனாவரையனார் ஆகுபெயர் அன்மொழித் தொகைபற்றிப் பேசுகையில் கட்டுரை