பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புலவர் த. கோவேந்தன்

19


சென்று அடையார் என்று தெளிவாக உணர்த்துகின்றார்.

கம்பராமாயணத்தில் சிவனைப் பற்றி வரும் சில குறிப்புக்கள் கம்பரது பரந்த மனப்பான்மைக்குச் சிறந்த சான்றாகும். “ஈறில்லாதவன் ஈசன் ஒருவனே” என்று தேவாரம் கூறுதற்கேற்ப, ஈறிலான் என்று சிவனைக் குறிக்கின்றார் கம்பர். சிவ பூசையை 'இருமைக்கேற்ற பூசனை’ என்று கூறிச் சிவனைச் சிறப்பிக்கின்றார். உமாதேவியை உலகீன்றாள் என்று உணர்த்துகின்றார்.

அரசியலைக் குறித்துச் சில அறிய கருத்துக்களைத் தெரிவிக்கின்றார் கம்பர். நல்லரசு என்றும் வல்லரசு என்றும் இருவகை அரசு உண்டு என்பது அவர் கருத்து. நல்லரசு அறத்தை அடிப்படையாக உடையது. அயோத்தியில் இருந்தது நல்லரசு, இலங்கையில் இருந்தது வல்லரசு. நல்லரசாட்சியில் அமைச்சர்கள் ஆராய்ந்து சொல்லும் அறிவுரையைத் தழுவி மன்னன் அரசு புரிவான். வல்லரசாட்சியில் மாறுபட்ட கருத்துடைய அமைச்சரை மன்னன் துச்சமாகக் கருதித் தூறு செய்வான். “தம்முயிர்க்கு உறுதி எண்ணார், தலைமகன் வெகுண்டபோதும், வெம்மையைத் தாங்கி நீதிவிடாது நின்றுரைக்கும் வீரர்” அயோத்தியின் அமைச்சராக இருந்தனர். ஆனால் இலங்கை அமைச்சரவையில் “இது அடுக்கும் இது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி இடிக்குநர் இல்லை.” இலங்கை அமைச்சர்கள் இராவணன் கருத்திற்கு இசைந்த மாற்றம் பேசும் இயல்பினராயிருந்தனர்.

சீதையை வஞ்சித்துக் கவர்ந்து இலங்கையில் சிறை வைத்தது தவறு என்று இராவணன் உடன் பிறந்தார் இருவரே துணிவாக எடுத்துரைத்தனர். “திட்டியின் வடமன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ இது விதியின் வண்ணமே” என்று கும்பகர்ணன் கூறிய பொழுது சீறினான் இலங்கை வேந்தன். அரசனைத்