பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

செந்தமிழ் பெட்டகம்


தமிழ் நாட்டில் சோழ மன்னர் புவிச் சக்கரவர்த்திகளாய் ஏற்றமும் தோற்றமும் வாய்ந்து விளங்கிய காலத்தில் கவிச் சக்கரவர்த்திகளாய் விளங்கியவர் மூவர் என்பர் முதற் குலோத்துங்கன் மீது கலிங்கத்துப்பரணி பாடிய சயங்கொண்டாரும், மூன்று சோழ மன்னரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த ஒட்டக்கூத்தரும் கல்வியிற் பெரியவராகிய கம்பரும் கவிச்சக்கரவர்த்திகள் என்று கொள்ளப்படுகின்றனர். இம்மூவருள் சயங்கொண்டாரும் ஒட்டக்கூத்தரும் சோழ மன்னர்களைப் பாடிச் சிறப்படைந்தவர்கள். ஆனால் கம்பர் மாநில மன்னரது ஆதரவைப் பெற்றதாகத் தெரியவில்லை.

இராம காதையிற் கம்பர் மிகவும் ஈடுபட்டவர் என்பதற்கு, 'ஆசைபற்றி அறையலுற்றேன்’ என்ற அவையடக்கப் பாட்டால் அறியப்படும். இராம நாமத்தின் பெருமையைப் பல இடங்களில் பேசுகின்றார் கவிஞர் அந்நாமம், மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரம் என்றும், 'செம்மைசேர் நாமம்' என்றும், 'எழுமை நோய்க்கும் மருந்து’ என்று திருமாலைப் போற்றுகின்றார் விராதன் முதலிய அன்பர்களின் வாயிலாக இராமனது தெய்வத் தன்மையை விளக்குகின்றார்.

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் சொல்லும் பொருளும் கம்பர் காவியத்தில் நன்கு எடுத்தாளப்படுகின்றன. ‘வந்தாய் போலே வாராதாய், வாராதாய் போல் வருவாயே' என்ற திருவாய்மொழிப் பாசுரம் 'வருவாய் போல வாராதாய்' என்றும், 'வாராதே வரவல்லாய்' என்றும் கம்பரால் போற்றப்படுகின்றது.

கம்பர் காலத்தில் சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய சமயங்களாகும். இவ்விரு சமயங்களும் இணக்கமுற்று வாழ்தல் வேண்டும் என்பது அவர் விருப்பம்” அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலார்” ஒருகாலும் பரகதி