உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

செந்தமிழ் பெட்டகம்

செருக்கு அடாதென்பது, பிறவி அறவேண்டின் இறை வழிபாடு அவசியம் என்பது முதலியன. இத்தகைய பேருண்மைகளையும் நடைச்சிறப்பையும் கண்டு உள்ளங் குளிர்ந்தே,

உதிருங் கனியை நறும்பாகில் உடைத்துக்
    கலந்து தேனைவடித்-
துாற்றி யமுதின் உடன்கூட்டி ஒக்கக்
    குழைத்த ருசி பிறந்து-
மதுரங் கனிந்த திருப்புகழ்ப்பா மாலை

எனத் திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் பாடின பெரியார் உகந்து புகழ்வர்.

அருணகிரியாரின் உபதேச உண்மைகள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் இந்நூல் தழுவுவன