பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

27

 அருணகிரியாரின் நடைச்சிறப்பு, பொருட் சிறப்புக்களை நோக்கும் போது அவரை 'நாற்கவிராஜர், முத்தமிழ் அரசு, நவரச நாயகர் இசைஞானியார், சந்தக்கவித் தலைவர், தாளச்செல்வர்' என்று கூறலாம். இவர் நெஞ்சிற் செஞ்சொற்கள் எளிதில் அமையும். உதாரணமாக வல்வோசை மிக வேண்டின்

“சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
சொர்க்கத் தத்தைக் கினியோனே” -என்பர் முருகவேளை.

மெல்லோசை வேண்டின்:

“இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கருள்

இலெங்கனும்

இலங்கென-முறையோதி-இடுங்கனல் குரங்கு”

-என்பர் அநுமனை.

தமிழுக்கே உரிய ‘ழ'கர ஒசை வேண்டின்,

“வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ”

என்பர்.

பெண்கள் வர்ணனை மிக்குள்ளது இவர் திருப்புகழில் என்றும், பெண்களை இவர் இழிவுபடுத்தி உள்ளார் என்றும் ஒரு குறை கூறுவர். இக்கூற்றுப் பொருந்தாது; இவர் காலத்திருந்த பொதுமகளிரின் வஞ்சனை நடத்தையையே கண்டித்துள்ளார்.

இவர் இறைவனிடத்தில் கேட்கும் வரங்களினின்றே திருப்புகழின் பொருட் சிறப்பு நன்கு புலப்படும். அத்தகைய ஆராய்ச்சியிற் புலப்படுகின்ற உண்மைகளாவன-அன்பின் சிறப்பு, ஆறெழுத்தின் பெருமை, அடியார்களுடன் இணங்குவதின் அவசியம், அவா அடக்கம், தகவிலரைப் புகழ்தலின் இழிவு, சமயப்போரின் பயனின்மை, ஈதலின் சிறப்பு, தொண்டின் பெருமை, ‘யான்’, ‘எனது’ அறுபட்டாலொழிய உண்மை புலப்படாமை, இயம பயம் நீங்க இறைவழிபாடு, கல்விச்