பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

செந்தமிழ் பெட்டகம்


ஒழுக்கம், மனு முறை கண்ட வாசகம் ஆகியவவை சிறந்த எடுத்துக் காட்டுகளெனலாம். இவர் பாக்கள் உள்ளத்தை உருகச் செய்யும் திருவாசகத்தைப் பெரிதும் நினைவூட்டுவன. ஏனைய திருமுறைகளிலும் சிறப்பாகத் தேவாரத்திலும் அடிகளுக்கிருந்த ஈடுபாட்டால் திருவருட்பாவின் சொற்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பொன்னே போல் போற்றித் தம் நூலில் வழங்குவதால் தெளிவாகும்

பெரும்பாலும் எளிய நடையில் அமைந்திருப்பினும் அரிய சொற்களையும் சிற்சில இடங்களில் காணலாம். இவ்வாறே, திருவருட்பாவில் கூறப்பெரும் கருத்துகள் பொதுவாக அனைவராலும் உணர்ந்து கொள்ளக்கூடிய எளிமை வாய்ந்தவையெனினும், நுண்பொருள் விளக்கங்கள், மெய்ப்பொருள் விளக்கங்களாக உள்ளவை கற்றுத் துறை போயவர்க்கும் உணர்தற்கரியன எனலாம் “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே’ என்று அடிகளார் இறை வனைப் பற்றிப் பாடியது அவர் நூலுக்கும் பொருந்துவதாகும். ஆறு திரு முறைகளிலும் விரிவாகக் காணப்பெறும் செய்திகளின் பிழிவாக அருட்பெருஞ்சோதியகவல் கருதப்பெருகிறது.

திருவருட்பாவை இயற்றுவதற்கு வள்ளலார் கூறும் காரணம் ஏனைய சமயச் சான்றோர் கூறும் காரணமேயாகும். அருள் உள்ளம் படைத்தவர்கள் தாம் பெற்ற இன்பத்தைப் பிறரோடு சேர்ந்து நுகர விழைவரேயன்றித் தனித்திருந்து இன்புற நினைப்ப தில்லை. வள்ளலாரும், “ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர், யானடையும் சுகத்தினை நீர் தானடைதல் குறித்தே” என்கிறார். இறைவனுடைய அருட் புகழ் பாடி இவ்வுலகத்தினரை இன்புறச் செய்வதோடு அமைவு கொள். ளாது, நம்மனோர் கருத்துக்கும் எட்டாத உலகங்களிலும் தாம் சென்று இப்பணி செய்ய விழைவதாக வள்ளலார் கூறுகிறார்: “அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்