பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

45


குப்ஜம், தானேசுவரம் இவற்றை ஆண்ட ஹர்ஷவர்த்தனருடைய சபையை அலங்கரித்த மகாகவி பாணபட்டருடைய உரைநடைக் காப்பியமான ஹர்ஷ சரிதம் இவ் வகுப்பைச் சேர்ந்தது. இதில் இவ்வரசனுடைய முன்னோர்களைப் பற்றியும், இவ்வரசனுடைய செயல்கள் சிலவும் கூறப் பெற்றுள்ளன; இதனுடன் நூலாசிரியர் பாணகவி தம்முடைய வாழ்க்கை வரலாற்றையும் இங்கே தந்திருக்கிறார். 8ஆம் நூற்றாண்டில் கான்யகுப்ஜத்து அரசன் யசோவர்மனால் ஆதரிக்கப் பெற்ற வாக்பதி எழுதிய கெளடவதம் என்ற பிராகிருத செய்யுள் நடையிலமைந்த காப்பியத்தில் யசோவர்மனுடைய வீரச் செயல்கள் கூறப்படுகின்றன.

நூற்றாண்டில் பில்ஹணர் எழுதிய விக்கிரமாங்க தேவ சரிதம் 11 ஆம் 18 சருக்கங்கள் கொண்ட வரலாற்றுக் காப்பியம். கல்யாணியை ஆண்ட சாளுக்க மன்னர்களான முதலாவது சோமேசுவரன், இரண்டாவது சோமேசுவரன், மற்றும் முக்கியமாக ஆறாம் விக்கிரமாதித்தன் இவர்களுடைய வரலாறும், இவர்களில் விக்ரமன் 11ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களை முறியடித்ததும் கூறப்படுகின்றன.

‘ராஜதரங்கிணி என்னும் மாபெரும் வரலாற்றுக் காப்பியம் கி. பி. 12ஆம் நூற்றாண்டில் காச்மீர நாட்டில் வாழ்ந்த கல்ஹணரால் எழுதப் பெற்றது. இதில் கவி காப்பிய அமிசத்தைக் குறைத்து, வரலாற்றமிசத்தை நல்ல முறையில் கையாண்டிருக்கிறார். நீலமுனி எழுதிய நீலமத புராணத்தையும், 11 ராஜ கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு தம் காப்பியத்தை இயற்றியதாகக் கல் ஹணர் கூறுகிறார். சாச்மீர வரலாறு மிகவும் விரிவாக இதில் எழுதப்பட்டுளது. பிற்காலத்தில் காச்மீரத்தில் நடந்த வரலாற்றை ஜோனராஜர் தம் அனுபந்தத்தில் தொடர்ந்து எழுதியிருக்கிறார். ஜோனராஜரின் மாணவர் ஸ்ரீவரர் பிராஜ்யபட்டர், அவருடைய