பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

71


ஆங்கில நாடகங்களும் தொடக்க நிலையில் அறநெறி புகட்டும் ஒரே நோக்கத்துடன் சமய சம்பந்தமான கதைகளையே எடுத்தாண்டன. ஆங்கிலத்தில் முதன் முதலாகத் துன்பியல் நாடகம் 1562ல் தோன்றியது; அதன் பெயர் கார்படக் கார்படக் போன்ற நாடகங்கள் கிரேக்கத் துன்பியல் நெறியைப் பின்பற்றவில்லை; ரோமானிய ஆசிரியரான செனிக்காவின் முறையையே தழுவின. மிக நீண்ட தனி மொழிகளும் அரக்கத்தனமான கொடுமைகளுமே இத்தகைய துன்பியல் நாடகங்களில் காணப்பட்டன. இந்தக் குறைகள் இருந்தாலும் கலையியல்பின் சிறந்த நிலை பெற்றிருந்தது கார்படக்

அதன் பிறகு வளர்ந்த துன்பியல் நாடக வரலாற்றில் மார்லோ (1564-1593) மிகவும் சிறப்பான இடம் பெறுகிறார். நகைச் சுவையும் நாடகக் கலைத் திட்பமும் மார்லோவுக்கு இல்லை; எனினும், துன்பியல் என்பதற்கு ஒரு நல்ல அமைப்பும் விளக்கமும் தந்தார். துன்பியல் என்றால், அச்சமூட்டும் பயங்கரமான சாவின் ஆதிக்கமே என்று இருந்த நிலை மார்லோவால் மாற்றப்பட்டது. மனிதனுடைய மனத்திட்பத்தின் வலிமையை வற்புறுத்து முகத்தான், இறுதியில் அந்த மனத்திட்பம் வீழ்ச்சி அடைய நேர்வதைச் சித்திரிப்பதே மார்லோவின் துன்பியல் விளக்கம், மார்லோவின் பாத்திரங்கள் சாதாரண மனித நிலைக்கு அப்பாற்பட்டு, மால் வரையன்ன பெருநிலை படைத்தனவாய் உள்ளன. அவருடைய நாடகச் சூழலின் எழிலும் இன்பப் பொலி வும் அதீத நிலை படைத்த பாத்திரங்களுக்குப் பொருத்தமாகவே உள்ளன.

அகவற்பா போன்ற செய்யுளே அவருடைய துன்பியல் நாடகங்களில் கையாளப்பட்டது. அதன் பின்னர், துன்பியல் நாடகத்துக்கு ஏற்றது அந்தச் செய்யுளே என்பது நிலைத்தது. நாடகத்துறையில் ஷேக்ஸ்பியருடைய நிலை தனிச் சிறப்புடையது. மார்லோ சிறந்த திறம் படைத்த கவிஞர். ஆனால்,