உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

செந்தமிழ் பெட்டகம்


ஒரங்க நாடகம் :

உலகத்திலுள்ள எல்லா இலக்கியங்களிலும், நாடகங்களைப் பொறுத்தவரையில், முதன் முதலில் ஒரங்க நாடகம் தான் இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. இதன் உண்மை ஆங்கில நாடக இலக்கியம் 13, 14 ஆம் நூற்றாண்டில் துவங்கியதிலிருந்து அறியலாம். கத்தோலிக்க மதம், தன் கொள்கைகளை மக்களிடம் பரப்புவதற்கு மத சம்பந்தமான மறைபொருள் நாடகம்', “அற்புத நாடகம்’ ஆகிய இரண்டையும் மாதாகோயிலிலேயே நடித்தார்கள். இவைகளெல்லாம் ஓரங்க நாடகங்களே. இதேபோல், உலகத்திலேயே மிகப் புராதனமான நாகரிக நாடுகளில் ஒன்றாகிய இந்திய நாட்டிலும் இந்துக் கோயில்களில் புராண சம்பந்தமான ஓரங்க நாடகங்கள் இப்போதும் (1958) நடைபெற்று வருகின்றன. அதே முறையில் மலையாள நாட்டில், சாக்கியார் கூத்து ஒட்டன் துள்ளல் என்று சொல்லப்பட்ட களியாட்டங்களிலும் இந்த உண்மை யைக் காணலாம். ஆகையால், நாடக இலக்கியத்தைப் பொறுத்தமட்டில், ஒரங்க நாடகத்திலிருந்து மூன்றங்கம், ஐந்தங்கம், பத்தங்கம் என்று நாடகம் பெருகிக் கொண்டு போய், விருத்தியடைந்து பிறகு மறுபடியும், எல்லோரும் எளிதில் அறிந்து, நடித்து அனுபவிக்கும் பொருட்டு ஓரங்கத்திற்கே திரும்பி வந்திருக்கிறது போல் தோன்றுகிறது.

16,17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் ஓரங்க நாடகத்தை நடித்தால் வருவாய் கிடைக்காத காரணத்தினால் தொழில் நடிகர்கள் அதை நடிக்காது விட்டனர். பிறகு 19ஆம் நூற்றாண்டில் நாடகப் பண்ணை இயக்கம் என்ற இயக்கத்தினால், ஒரங்க நாடகம் மறுபடியும் தலை தூக்கி, பிரிட்டிஷ் நாடகக்குழு அமெரிக்கச் சிறு நாடகவரங்க இயக்கம் என்ற இவைகளின் உதவியால் முன்னணிக்கு வந்திருக்கிறது. இந்த இயக்கங்களில்