புலவர் த. கோவேந்தன்
85
தில்லை. நடிகர்கள் தங்கள் திறமைக்குத் தக்கவாறு பேச்சுக்களை அமைத்து நடிப்பர். இந்த நாடகங்கள் காதற் காட்சிகள் முதலிய விஷயங்களையே பொருளாகக் கொண்டிருந்தன. இந்த நாடகங்களில் நாடகக் கதைக்குச் சிறிதும் தொடர்பில்லாத நகைச்சுவை நிகழ்ச்சிகள் சேர்க்கப்படும். போக்கிரியான பணியாள், கிழவன், தோழி போன்ற பாத்திரங்கள் இந்த நாடகங்கள் ஒவ்வொன்றிலும் உண்டு. இவர்களுடைய உடையும் ஒன்று போலவே இருக்கும். இவர்கள் முகமூடி அணிவர்.
நிக்கோலா டா காரிஜியோ என்பர் நாட்டுப்புற நாடகம் எழுத ஆரம்பித்தார். அது ஆயர்களைப் பற்றியதாக இருக்கும். இத்தகைய நாடகங்களுள் மிகச் சிறந்தது டாஸோ என்பவர் எழுதிய அமின்டா என்பதாகும். அதில் நடிப்பு மிகக் குறைவு. அதன் சிறப்பு, கவிதையே.
இவ்வாறு புதுவிதமான நாடகங்கள் தோன்றிய போது பிரபுக்கள் தங்கள் மாளிகைகளிலேயே நாடக அரங்குகள் கட்டினர். 16 ஆம் நூற்றாண்டில் தொழில் நடிகர்கள் நாடகக் கம்பெனிகள் அமைத்தனர். இதுவே ஐரோப்பாவில் முதன்முதல் நாடகக் கம்பெனி தோன்றியதாகும். பெண் நடிகர்களும் தோன்றலாயினர். இந்தக் கால முதல் நாடகம் நடத்துவது ஒரு வாணிகமாக ஆயிற்று.
ஆபாசமான நாடகங்களை ஒழித்து நல்ல நாடகங்களை உண்டாக்க முயன்றனர். கார்லோ கோல்டானி என்பவர் 160 நாடகங்கள் வரைந்தார். இவருடைய நாடகங்களில் பேச்சுத் துய நகைச்சுவை நிரம்பியிருக்கும்.
கார்லோ காஸி (1722-1806) என்பவர் தேவதைக் கதைகளை நாடகமாக்கி நாடக அரங்கைத் தூய்மை செய்தார்.
மாபீ (1675-1775) என்பவர் எழுதிய மெரப்பீ என்னும் துன்பியல் நாடகம் ஐரோப்பா முழுவதிலும் புகழ்பெற்றது.