பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சித்தனைகள்

13



தாெகுத்துக் கலைப்பொருட்காட்சிச் சாலைகளில் அமைக்க வேண்டும்; புகைப்படங்கள் எடுத்தும் நூலாக வெளியிட வேண்டும்.


7. தமிழ் நாட்டுக் கோவில்களிலும் கிராமங்களிலும் கிடைக்கும் பழங்காலத்து விளக்குகளையும் பாத்திரங்களையும் பண்டங்களையும் தொகுக்க வேண்டும். அவற்றை, அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து நூலுருவில் வெளியிட வேண்டும்.


8. 'தமிழ்க் கலைப்பொருட்காட்சிச்சலை' யின் சார்பில் ஆண்டுக்கொரு முறையேனும் ஒர் ஆராய்ச்சி மலர் வெளியிடப்பெற வேண்டும். அதில் கலைப்பொருள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம் பெறல் வேண்டும்.


9. தமிழ் நாட்டுப் பேரூர்கள், இலக்கிய வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்கள், மலைகள், ஆறுகள், கோட்டைகள் முதலியவற்றின் பல்வேறு கலங்களும் துலங்கும் வகையில் அந்த இடங்களைப் படமெடுத்து நூலாகவும் திரைப்படமாகவும் வெளியிட வேண்டும். தக்க இடங்களில் வானவெளியில் இருந்து படங்கள் எடுப்பது பயனளிக்கும்.


10. தமிழ் நாட்டுத் திருவிழாக்களையும், நிழலாட்டம், பாவையாட்டம் முதலிய பொழுது