பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்

17




XIV. புது வகை ஆராய்ச்சி நூல்களும் நவீனங்களும்


1. தமிழ் நாட்டின் நிலவளம், மலைவளம், கடல்வளம், சுரங்கவளம், கைத்தொழில் வளம் முதலியன பற்றிப் புள்ளி விவரங்களுடன் தனித்தனி ஆராய்ச்சி நூல்கள் வெளியிடப் பெற வேண்டும்.


2. தமிழ் நாட்டு மரங்கள், மலர்கள், செடிகள், கொடிகள், பறவைகள், விலங்குகள் முதலியன பற்றி இலக்கிய விஞ்ஞான நாேக்குடன் தனித்தனி ஆராய்ச்சி நூல்கள் வெளியிடப் பெற வேண்டும்.


3. தர்ஸ்டன் (Thurston) போன்ற பெருமக்கள் முன்னரே செய்துள்ள ஆராய்ச்சியின் துணை கொண்டு தமிழ் நாட்டுச் சாதிகள் குழுக்கள் பற்றி ஆராய்ச்சி நூல்கள் வெளியிடப் பெற வேண்டும்.


4. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் புதுவகை நவீனங்கள் மிகவும் இன்றியமையாதன. தமிழகத்தின் இயற்கை வளங்களையும் வட்டார வழக்குகளையும் பல்வகை வாழ்க்கைக் கூறுபாடுகளையும் நுணுக்கமாய்க் காட்டும் வகையில் புதிய நவீனங்கள் அமைய வேண்டும். கற்பனைக்கும்