பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் ৰ@প fr י மேலும் சோழமண்டலக்கரை வழியாக வங்காளநாட்டுக்குச் செல்லும் சேதுபதி மன்னரது கப்பல்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில் விணான காலதாமதம் செய்து வந்ததுடன் பெரியதம்பி மரைக்காயரது கப்பல் ஒன்றினை கொழும்பு துறைமுகத்துக்கு கடத்திச் சென்று அதிலிருந்த இரும்பு, துணிகள் போன்ற சரக்குகளின் பொதிகளை பறிமுதல் செய்து அவர்களது உபயோகத்திற்கு எடுத்துக்கொண்டனர். இதுபற்றி மன்னரும், பெரியதம்பி மரைக்காயரும் நீண்ட கடிதத் தொடர்பை டச்சுக்காரர்களிடம் கொண்டிருந்தும் பயனில்லை. இவ்விதமர் டச்சுக்காரருக்கும். பெரியதம்பி மரைக்காயருக்கும் கடுமையான மோதல்கள் தொடர்ந்தன. இதற்கு முத்தாப்ப்பு வைப்பது போல கி.பி.7708ல் நடந்த துத்துக்குடி முத்துக்குளிப்பு நிகழ்ச்சிகள் அமைந்தன. கிழக்கரை தேவிப்பட்டினர். சுந்தரபாண்டி பட்டினர் ஆகிய ஊர்களிலிருந்து முத்துச் சிலாபத்திற்குச் சென்ற படகுகளும், முத்துக்குளிப்பவர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்பி விட்டனர். தொடர்கதையான போட்டியையும் சமாளிக்க முடியாது அந்த பெரியதம்பி மரைக்காயர் விலகி விட்டார். இந்த ஆழந்த சிந்தனையில்லாத முடிவு சீதக்காதி மரைக்காயர் இல்லாத அந்த குடும்பத்தினருக்கு மிகப்பெரிய இழப்பீட்டையும், சமுதாய நிலையில் இழிவையும் ஏற்படுத்திவிட்டன. அடுத்து இந்தக் குடும்பத்தின் பிரதிநிதியாக வாணிபத்தில் ஈடுபட்டவர் ( பெயர் அறியத்தக்கதாக இல்லை. ஆனால் டச்சு ஆவணங்கள் அவரை இரண்டாவது பெரியதம்பியான அப்துல் காதரது மகன் என குறிப்பிடுகின்றன) இவர் இளைஞராகவுக் வாணிபத்துறைக்கு முற்றிலும் புதியவராகவும் இருந்த காரணத்தினால் முறையாக செயல்படவில்லை. மிகப்பெரிய எதிரியான டச்சுக்காரர்களை அவரால் சமாளிக்க முடியவில்லை என்றே தெரிய வருகிறது. கிழவன் ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலச் வரை டச்சுக்காரர்களால் இந்த இளைஞருக்கு சிரமம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கி.பி.1770ல் கிழவன் சேதுபதி ایص